ilakkiyainfo

மட்டக்களப்பு பல்கலையை ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்க பரிந்துரையாம்!

மட்டக்களப்பு பல்கலையை ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்க பரிந்துரையாம்!
July 17
21:37 2019

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை (Batticaloa Campus) அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழு அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளபோதும் அமைச்சரவை உபகுழு அதனை பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் தனியார் நிறுவனமாக நடத்த ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்க பரிந்துரை செய்ய தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது.

அதனால் அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒரு நாள் விவாதம் ஒன்றை கோர இருக்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி கட்சி காரியாலயத்தில் இன்று (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

8113ff8f-batticaloa-campus

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த நிறுவனம் எந்த நோக்கதில் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை மாற்றி அடிப்படைவாத கொள்கையை வளர்க்கவே நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு பணம் வந்த இடங்களை பார்க்கும்போது அதனை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

அதன் பாடநெறிகளும் அவ்வாறே அமைந்திருக்கின்றன. அதனால் இதற்கு அனுமதி வழங்கினால் எதிர்காலத்தில் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களும் பணம் அனுப்பி தமிழ் அடிப்படைவாத பல்கலைக்கழகங்கள் அமைக்க இடமிருக்கின்றது.

இந்த நிலையில் அமைச்சரவை உபகுழு பட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹவுக்கே வழங்கி, பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் தனியார் நிறுவனமாக அனுமதியளிக்க சிபார்சு செய்துள்ளதாக தெரிய வருகின்றது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com