மனிதனில் குடலுக்குள் உயிருடன் குடித்தனம் நடத்திய மீன்- அறுவை சிகிச்சை உயிருடன் அகற்றம் (அதிர்ச்சி வீடியோ)
பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது.

அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து நீளமான மீனை மருத்துவர் உயிரோடு அகற்றினார்.

கூச்சலிட்டு ஆரவாரம்: அப்போது உடன் இருந்த மருத்துவர்கள் அதனை வீடியோ எடுத்ததுடன், கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர்.
அனுமதி இல்லாமல் பதிவேற்றம்: அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த நபர், தனது அனுமதி இல்லாமல் தனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை படமாக்கப்பட்டதாகவும், அந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
விரைவில் விசாரணை: இதையடுத்து முறையான அனுமதி இல்லாமல் அறுவை சிகிச்சையை படமாக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
There are no comments at the moment, do you want to add one?
Write a comment