ilakkiyainfo

மனைவியுடன் தகராறு: இரு பிள்ளைகளின் தந்தை தற்கொலை

மனைவியுடன் தகராறு: இரு பிள்ளைகளின் தந்தை தற்கொலை
March 08
15:20 2014

 

அம்பாரை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று (08) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு ஆலையடிவேம்பு நாவற்காடு கோபால் கடை வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 35 வயதுடைய சுப்பையா அசோக்குமார் என தெரியவந்துள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது,

இச் சம்பவத்தில் உயிரிழந்தவருக்கும் மனைவிக்கும் இடையே குடும்பத்தகராற்றினால் மனைவி பொலிஸ் நிலையத்தில் இவருக்கு எதிராக மறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து இவர் தலைமறைவாகி பின்னர் உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ள நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை நீதின்றத்தில் வழக்கிற்கு ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் இவரை மனைவி பிள்ளைகளின் வாழ்க்கைச் செலவிற்காக 7 ஆயிரம் ரூபாவை மாதாந்தம் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் வழமைபோல நேற்று இரவு 8.00 மணிக்கு மகளுடனும் பிள்ளைகளுடனும் நித்திரைக்கு சென்ற தாயார் சம்பவதினமான இன்று காலை 6.00 மணியளவில் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது மாமரத்தில் மருமகன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளாதை கண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மனைவியாருக்கு தெரியாமல் வீட்டு காணிக்குள் நுழைந்து தற்கொலை செய்துள்ளார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாய், தந்தை வெளிநாட்டில்: சிறுவனுக்கு சூடு வைத்த பாட்டி
08-03-2014
1614960969DS3திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் செல்வகுமார் விக்னேஷ்வரன் என்ற சிறுவனை சிறுவனின் பாட்டி முகத்திலும், கால்களிலும் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவன் பாடசாலைகளில் சில பொருட்களை திருடுவதனால் தான் குறித்த பாட்டி விறகு கட்டையால் சூடு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தந்தை, தாய் இருவருமே வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு குறித்த பாட்டியை 07.03.2014 அன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின் 10000 ரூபா சரீர பிணையில் விடுவித்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com