ilakkiyainfo

மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் மடு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு

மன்னாரில் காணாமல்போன குடும்பஸ்தர் மடு காட்டுப் பகுதியில் சடலமாக மீட்பு
December 02
14:32 2017

மன்னார், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மடு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆண்டாங்குளம் சந்தியில் முடி திருத்தகத்தை (சலூன்) நடத்திவரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த 25-10-2017 அன்று மாலை 4 மணியளவில் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

24174647_1987159904868243_8956299892418830486_n

இந்த நிலையில் அடம்பன் பொலிஸார் மற்றும் உறவினர்கள் குறித்த குடும்பஸ்தரை நீண்ட நாட்கள் தேடியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

24293909_1987159851534915_7616423706385851356_n

இந்த நிலையில் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி , மடு பூ மலந்தான் கிராம அலுவலகர் பிரிவுக்குட்பட்ட மடு 3 ஆம் கட்டை காட்டுப்பகுதியில் மிகவும் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக மடு பொலிஸாருக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை தகவல் கிடைத்த நிலையில் மடு பொலிஸார் சடலத்தை சென்று பார்வையிட்டனர்.

bodyyyyyyyyyyya

இந்த நிலையில் குறித்த சடலத்தை பார்வையிட்ட காணாமல்போன குடும்பஸ்தரின் உறவினர்கள் , காணாமல் போன ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சன் நீக்கிலாஸ் (வயது-56) என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் மடு பொலிஸார் , கிராம அலுவலகர் மற்றும் விசேட தடயவியில் நிபுணத்துவ பொலிஸார் ஆகியோர் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டதோடு,மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

policeea

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com