மயக்கத்திலிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஐவரை விடுதலை செய்துள்ள ஸ்பெயின் நீதிமன்றம் மயக்கத்திலிருந்த ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் அதனை வன்முறையாக கருதமுடியாது என சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

பார்லோசினாவின் வடமேற்கில் உள்ள மன்ரெசா என்ற நகரில் 2016 இல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட நபர்கள் கைவிடப்பட்ட தொழிற்சாலையொன்றில் களியாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை 14 வயது யுவதி  போதைப்பொருளையும் மதுவையும் பயன்படுத்தி  மயக்கமுற்றுள்ளார்.

இதனை பயன்படுத்திய ஐந்து நபர்களும் அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார்கள் என நீதிமன்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சிறுமி மயக்கநிலையிலிருந்தார்,தன்னுடன் அவர்கள் பாலியல் உறவு கொள்வதை ஏற்றுக்கொள்ளவும் எதிர்க்கவும் முடியாத நிலையில் காணப்பட்டார்,அவர்கள் வன்முறையை பயன்படுத்தாது  பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

பாலியல் வன்முறையின் போது பாதிக்கப்பட்டவர் சுயநினைவின்றியிருந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால் நடந்த சம்பவத்தினை  பாலியல் வன்முறையாக கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.