காணாமல் போன மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த விமானி இறுதியாக ‘ஓல் ரைட், குட் நைட்‘ (‘All right, good night’) என்று கூறியுள்ளார்.
வியட்னாம் வான்வெளியில் இருந்த போதே இந்தச் செய்தி வந்துள்ளது. இறுதியாக விமானம் தெரிந்தல் நிலையிலிருந்து 100 மைல்கள் தள்ளி அதனை கண்டுபிடித்து விடலாம் என்றும் கூறி உள்ளார்.

காணாமல் போன மலேசிய விமானம் குறித்து இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு மாயமானது.
இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப் பெறவில்லை, விமானத்தை தேடும் பணியில் சீனா, அமெரிக்கா மற்றும் மலேசிய நாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
நேற்றைய தகவலின்படி ரேடார் தொடர்பை இழப்பதற்கு முன்பாக அந்த விமானம் மலாக்கா ஜலசந்திக்கு மேலே சென்றதாக தகவல் வெளியாகியது, பின்னர் மறுக்கப்பட்டுள்ளது.
ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் போத்தல்களால் தாக்குதல்
இந்நிலையில் விமானம் மாயமானது குறித்து உண்மையான தகவல்களை தெரிவிக்க கோரி, பயணம் செய்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள், மலேசிய மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் போத்தல்களை வீசி தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
பீஜிங்கில் ஓட்டல் ஒன்றில் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை சந்தித்து பேசிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அந்தமான் கடற்பகுதியிலும் மலேசிய விமானத்தை தேடும் பணி தீவிரம்
காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி தற்போது சீன கடற்கரைப் பகுதிகளில் தொடங்கி அந்தமான கடற்கரை வரை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் விமானத்தை பற்றிய எவ்வித உறுதியான தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

வியாட்நாம் நாட்டின் தெற்கு கடற்கரை முழுவதும் தேடும் பணி முடிந்துள்ள நிலையில் மலேசியா குழப்பமான தகவல்களை வெளியிட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய அந்நாடு தற்போது கிழக்கு கடற்கரை பகுதியிலும் நிலப்பகுதிகளிலும் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
சீனாவும் தற்போது தனது நாட்டின் நிலப்பரப்புகளில் விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ள.

மலேசிய கடற்கரையின் இரு புறத்திலும் 12க்கும் மேற்பட்ட விமானங்களும் ஏராளமான கப்பல்களும் சுமார் 15 ஆயிரம் சதுர மைல் தூரத்திற்கு தேடுதல் வேட்டையை முடித்துள்ள நிலையில் எவ்வித தகவலும் கிடைக்காததால் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விமானத்தை தேடும் பணியில் 10 நாடுகள
மாயமான விமானத்தை கண்டுபிடிக்க மலேசியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 10 நாடுகள் 34 விமானம் மற்றும் 40 கப்பல்கள் மூலமாக தேடி வருகின்றன.

இதற்கிடையே, சீனாவின் ஜியான் செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையம், மாயமான விமானத்தை கண்டு பிடிக்க 10 உயர்திறன் செயற்கைக்கோள்களை பயன்படுத்துகிறது. விமானம் மாயமாகி 100 மணி நேரம் கடந்தும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்படத்தக்கது.
Post Views: 592
There are no comments at the moment, do you want to add one?
Write a comment