ilakkiyainfo

மஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)

மஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)
April 18
10:56 2019

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்து தொடர்பில் மற்றுமொரு சோகச் செய்தி வெளியாகியுள்ளது.

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில்  மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று அதிகாலை  இடம்பெற்ற  வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட  10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

mahiyangana-accident-updateஉயிரிழந்த இவர்களில் வெளிநாட்டில் 20 வருடங்களாக பணியாற்றிவிட்டு நாடு திரும்பியிருந்த நபர் ஒருவரும் நேற்றைய விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

57644708_132640651150316_5838232951933894656_nஇந்த செய்தி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ஜோஷப் ரெலின்டன் ஓமானில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

57076324_284221259145708_9159355983099592704_nநீண்ட வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய தனது குடும்ப உறுப்பினரை அழைத்துச் செல்வதற்காக குடும்பத்தார் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கடந்த 13 ஆம் திகதி வந்துள்ளனர்.Preview post

57192381_1714503032028197_288003494504300544_nபின்னர் ஜோஷப் ரெலின்டனை அழைத்துக்கொண்டு தெஹிவளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளனர்.

57368751_387995942041673_3323729127126597632_nஇதனையடுத்து  கடந்த திங்களன்று  இரவு ஜா-எல பகுதிக்கு   தமது உறவினர் வீடொன்றுக்கு வந்துள்ளனர்.  அதன் பின்னர் அங்கு இருந்து உறவுக்கார சிறுமி ஒருவரையும் அழைத்துக்கொண்டு  கண்டி, நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

57467934_132640607816987_969217910746644480_nசுற்றுலா சென்று  மட்டக்களப்பில் உள்ள தமது வீடு நோக்கி செல்லும் போதே விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.

57485628_664256427365807_4536568371860209664_n

உயிரிழந்தவர்களின் விபரம்

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான  ஜோஷப் ரெலின்டன் ( 20 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியவர்), அவரது மனைவியான  50 வயதுடைய சில்வியா ஜோஷப்  மட்டக்களப்பு டச் பார் பகுதியைச் சேர்ந்த 32 வயதான  லிஸ்டர்  அலக்ஸ்சாண்டர்,  அவரது மனைவியான 27 வயதுடைய  நிசாலினி அலக்ஸ்சாண்டர்,  அவர்களின் இரட்டை மக்ள்களான 4 வயதினை உடைய  ஹனாலி அலக்ஸ்ஸாண்டர் , பைகா அலக்ஸ்சாண்டர்,  மட்டக்களப்பு ரத்னம் வீதியைச் சேர்ந்த 48 வயதான  யூட் பிரின்ஸ் ஹென்றிக் அவரது  மனைவி 42 வயதான மரியா பிரன்சியா ஹென்றிக் அவர்களது 10 வயது மகளான செரபி ஹென்ரிக் 19 வயது மகனான யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்றிக்  ஆகியோரே உயிரிழந்தவ்ர்களாவர். விபத்தின் போது 19 வயது  யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்றிக் என்பவரே வேனை செலுத்தியுள்ளார்.

57390199_132641424483572_7609961039467118592_n

சிகிச்சை பெறுபவர்கள்:

இதற்கு மேலதிகமாக காயமடைந்த இருவரில் ஒருவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 16 வயதான ரொஷானி பர்கசால்  எனும் சிறுமி எனவும் மற்றையவர் உயிரிழந்த  யூட் பிரின்ஸ் ஹென்ரிக் மற்றும் மரியா பிரின்சியா ஹென்ரிக் ஆகியோரின் 13 வயதான மகள்  ஷெஹானி ஹென்ரிக் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

57101536_2140050799377332_2755813577330786304_n

57106650_2140050726044006_3476043077058035712_n

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com