ilakkiyainfo

மாமியார் கொடுமை:விஷம் அருந்தி,பொலிஸில் புகார் கொடுத்துவிட்டு உயிரிழந்த மருமகள்,பேத்தி

மாமியார் கொடுமை:விஷம் அருந்தி,பொலிஸில் புகார் கொடுத்துவிட்டு உயிரிழந்த மருமகள்,பேத்தி
October 28
08:25 2014

விஷம் அருந்தி விட்டு பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல்லில் இடம்பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் – கொட்டப்பட்டியில் வசித்து வந்த வனஜாவின் கணவர் உயிரிழந்த நிலையில் அவரும் அவரது 13 வயதுடைய மகளும் தனது மாமனார் மாமியார் துணையில் வாழ்ந்து வந்தனர்.

தனது மருமகளையும், பேத்தியையும் மிகவும் கொடுமை செய்து வந்ததாகவும்,வனஜாவின் 3 ஏக்கர் நிலத்தையும் அவர்கள் அபகரித்து கொண்டதாகவும் பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு சென்று மனுவை கொடுத்து விட்டு நாம் ஏற்கனவே விஷம் அருந்தி விட்டதாக குறித்த மருமகளும் பேத்தியும் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பொலிஸார் இருவரையும்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரச வைத்தியசாலையில் அனுமதித்ததையடுத்து இருவரும் மேலதிக சிகிச்சைக்காக மதுரை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஒட்டன்சத்திரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com