ilakkiyainfo

மார்க்கெட்டை தக்க வைக்க இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் மூத்த நடிகைகள்

மார்க்கெட்டை தக்க வைக்க இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேரும் மூத்த நடிகைகள்
July 01
09:53 2016

மூத்த நடிகைகள் ‘மார்க்கெட்’டை தக்க வைக்க இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர ஆர்வம் காட்டுகிறார்கள்.

திரையுலகம் போட்டி நிறைந்ததாக மாறி இருக்கிறது. புதிய கதாநாயகிகள் வரத்து அதிகமாக இருக்கிறது. வருடத்துக்கு 150-க்கும் மேற்பட்ட புதுமுக நடிகைகள் அறிமுகமாகின்றனர். அவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் ஒரு படத்திலேயே காணாமல் போகின்றனர்.

இளம் கதாநாயகிகள் மத்தியில் 10 வருடங்களை தாண்டி நடித்துக் கொண்டு இருக்கும் மூத்த நடிகைகள் தங்கள் ‘மார்க்கெட்’டை தக்க வைத்துக் கொள்வது சவாலாக இருக்கிறது.

அவர்கள் சினிமாவில் தொடர இளம் நடிகர்களுடன் ஜோடி சேரும் இந்தி நடிகைகள் தந்திரத்தை கையாளத் தொடங்கி உள்ளனர்.

இந்தியில் முன்னாள் கதாநாயகிகள் ஷில்பா ஷெட்டி, ராணி முகர்ஜி, தபு உள்ளிட்ட பலர் இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் வயதான பிறகும் சினிமாவில் நீடித்தனர்.

தற்போது தீபிகா படுகோனே, கரீனாகபூர், கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து தங்கள் மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறார்கள். அவர்கள் பாணியை இங்குள்ள நடிகைகளும் பின்பற்றுகிறார்கள்.

ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா போன்றோருடன் நடித்து மூத்த நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட நயன்தாரா இப்போது இளம் கதாநாயகர்களுடன் நடிப்பதில் தீவிரம் காட்டுகிறார்.

விஜய் சேதுபதியுடன் அவர் ஜோடி சேர்ந்த நானும் ரவுடிதான் படம் வசூலை அள்ளியது. இன்னொரு படத்திலும் விஜய்சேதுபதியுடன் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனுடனும் புதுபடம் ஒன்றில் ஜோடி சேர்கிறார்.

கமல்ஹாசன், சிரஞ்சீவி, வெங்கடேஷ் போன்றோருடன் நடித்த திரிஷா மூத்த நடிகை என்ற இமேஜை மாற்ற வயது குறைந்த நடிகர்களுடன் ஜோடி சேர கதை கேட்கிறார். தற்போது நாயகி, மோகினி, போகி படங்களில் இளம் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் வெங்கடேஷ், நாகார்ஜுனா போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா இப்போது ஆர்யா, ராணா, பிரபாஸ், என்று இளம் நடிகர்களுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

பாக்மதி படத்தில் ஆதியுடன் நடிக்கிறார். இளம் நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் இன்னும் 4, 5 ஆண்டுகள் கதாநாயகியாக நீடிக்க முடியும் என்று நம்புகிறார்.

விஜய், விக்ரம், சூர்யா, மகேஷ்பாபு, பவன்கல்யாண் போன்றோருடன் நடித்த சமந்தா இளம் தெலுங்கு நடிகர் நிதினுடன் தற்போது நடிக்கிறார்.

நாக சைதன்யாவுடனும் நடித்துள்ளார். இதுபோல் மூத்த நடிகர்களுடன் நடித்த தமன்னா தற்போது விஜய் சேதுபதி, ராணா என்று இளம் நடிகர்கள் ஜோடியாக மாறி இருக்கிறார்.

காஜல் அகர்வால், சுருதிஹாசன் உள்ளிட்ட பல நடிகைகள் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர விருப்பம் காட்டுகிறார்கள்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com