மிஸ்கோல் காதலியின் 12 வயது மகள் மீது இராணுவ வீரர் பாலியல் வல்லுறவு
தவறிய அழைப்பின் மூலம் அறிமுகமான காதலியைத் தேடிவந்த இராணுவ வீரரொருவர் அக்காதலியின் 12 வயதான மகளை வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சமயம் ஊர் மக்கள் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கம்பளை அபுகஸ்பிட்டிய பகுதியைச்சேர்ந்த விதவைப் பெண்ணான குறித்த பெண் சில காலங்களுக்கு முன்னர் தனது தொலைபேசிக்கு வந்த தவறிய அழைப்பின் மூலம் அறிமுகமான எம்பிலிப்பிட்டியைச் சேர்ந்த இராணுவத்தில் கடமையாற்றும் இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்டு சித்திரைப் புத்தாண்டு விடுமுறையின் போது தனது வீட்டுக்கு வந்து தங்கிவிட்டு போகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது
இதற்கமைய சம்பவதினம் காதலியைத் தேடிவந்த குறித்த இராணுவ வீரர், அன்றிரவு காதலியுடன் தங்கியுள்ளதோடு அதிகாலை காதலியின் மகளான 12 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் ஊரவர்களுக்கு விடயம் தெரியவரவே அந் நபரை பிடித்து நையப்புடைத்து கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கம்பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment