Site icon ilakkiyainfo

மீண்டும் பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்ய முயன்றால் பௌத்தர்களின் பொறுமை எல்லையைத் தாண்டி விடும்: ஜாதிக ஹெல உறுமய கடும் எச்சரிக்கை

கிராண்ட்­பாஸில் மீண்டும் பள்­ளி­வா­சலை புனர்­நிர்­மாணம் செய்ய முனைந்தால் பௌத்­தர்­களின் பொறுமை எல்­லை­தாண்டி விடும் என எச்­ச­ரிக்கை விடுக்கும் ஜாதிக ஹெல உறு­மய இப்­ப­கு­தியில் மீண்டும் குழப்­ப­க­ர­மான சூழல் தோன்றி இன­மத மோதல்கள் ஏற்­பட்டால் அதற்­கான பொறுப்பை பிரதியமைச்சர் பைசல் முஸ்­த­பாவும், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அனுர சேனா­நா­ய­க­வுமே ஏற்­றுக்­கொள்ள வேண்­டு­மென்று தெரி­வித்­தது.

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­மை­ய­கத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய ஜாதிக ஹெல உறு­ம­யவின் தேசிய அமைப்­பா­ளரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க

கிராண்ட்பாஸ் மோல­வத்த பகு­தியில் களஞ்­சி­ய­சா­லை­யாக பயன்­ப­டுத்தி வந்த கட்­டி­ட­மொன்றை தொழு­கைக்­கான பள்­ளி­வா­ச­லாக மாற்ற முனைந்­ததன் விளை­வாக ?????ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி அங்கு மோதல்கள் ஏற்­பட்­டன.

இதன் பின்னர் அமைச்சர் சம்­பிக ரண­வக்க தினேஷ் குண­வர்­தன மற்றும் பௌத்த குருமார் இணைந்து சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அனுர சேனா­நா­யக்க மற்றும் அமைச்சர் பைசல் முஸ்­த­பா­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம்.

அப்­போது அப்­பி­ர­தேச முஸ்லிம் பிர­தி­நி­திகள் தாம் பயன்­ப­டுத்தும் பள்­ளி­வா­சலில் இட­வ­சதி இல்­லை­யென்றும் அரச மர­மொன்று வளர்ந்­தி­ருப்­ப­தா­கவும் எனவே தான் புதிய இடத்தில் பள்­ளி­வா­சலை அமைப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர்.

இதன் பின்னர் பழைய பள்­ளி­வா­சலில் வளர்ந்­துள்ள அரச மரத்தை வெட்டி அப்­பு­றப்­ப­டுத்­தவும் அதனை விஸ்­த­ரிக்­கவும் நாம் ஆத­ரவு வழங்­கினோம்.

இவ்­வா­றா­ன­தொரு இணக்­கப்­பாட்­டுடன் அன்று பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட்­டது.

அத்­தோடு அன்று இடம்­பெற்ற மோதல்கள் சேதங்கள் தொடர்­பாக நீதி­மன்­றத்தில் வழக்கு உள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் மீண்டும் களஞ்­சி­ய­சாலை இர­வோடு இர­வாக புனர் நிர்­மாணம் செய்­யப்­பட்டு நோன்பை இலக்­காக வைத்து பள்­ளி­வா­ச­லாக்க முயற்­சிக்­கின்­றனர்.

இங்கு பள்­ளி­வாசல் இருக்­கக்­கூ­டா­தென மத அலு­வல்கள் திணைக்­களச் செய­லா­ளரும் தடை விதித்­துள்ளார்.

இத­னை­யெல்லாம் மீறி அப்­பி­ர­தேச பௌத்த குரு­மா­ரோடு பேச்சு நடத்­தாது அமைச்சர் பைசல் முஸ்­த­பாவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அனுர சேனா­நா­ய­கவும் பௌத்த குரு­மார்­களின் இணக்­கப்­பா­டுடன் புதிய பள்­ளி­வாசல் புனர் நிர்­மாணம் செய்­யப்­பட்டு வரு­வ­தாக ஊட­கங்­க­ளுக்கு செய்­திகள் வழங்­கி­யுள்ளார்.

இச்­செய்­தி­களில் உண்­மை­யில்லை. பௌத்­தர்­களை மடை­யர்­க­ளாக்கி பௌத்த குரு­மாரை ஏமாற்றி தற்­போது புதிய நாடகம் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு பழைய பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கி­லுள்ள சிங்­க­ள­வர்­களின் வீடு­களை பணம் கொடுத்து வாங்கி விட்­ட­தா­கவும் கூறி­யுள்­ளார்கள்.

அம் மக்கள் இதனை மறுக்­கின்­றனர். எனவே தொடர்ந்தும் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி பெளத்­தர்­களை நெருக்­க­டியில் தள்ள வேண்டாம். சட்ட விரோ­த­மான கட்­டி­டத்தில் மீண்டும் பள்­ளி­வாசல் ஆரம்­பிக்­கப்­பட்டால் பௌத்­தர்­களின் பொறு­மையும் எல்லை தாண்­டி­விடும். இப்­பி­ரச்­சி­னையால் கிராண்­பாஸில் இன மத மோதல்கள் தலை­தூக்கும் ஆபத்து உள்­ளது.

அவ்­வா­றா­ன­தொரு நிலையேற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அமைச்சரும் பொலிஸ் அதிகாரியுமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கிரேண்ட்பாஸ் சுவர்ண சைத்திய விஹாரையின் மெட்டரம்பே தம்மானந்த தேரர் சமாதி விஹாரையை சேர்ந்த ??????? அநுருத்த தேரர் உட்பட தேரர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version