ilakkiyainfo

முச்சக்கர வாகனங்களில் மீற்றர் கட்டாயம், கட்டணங்களுக்கு பற்றுச்சீட்டும் வழங்க வேண்டும்!!: அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது!!

முச்சக்கர வாகனங்களில் மீற்றர் கட்டாயம்,  கட்டணங்களுக்கு பற்றுச்சீட்டும் வழங்க வேண்டும்!!: அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது!!
January 14
22:03 2017

சகலபயணிகள் முச்சக்கர  வண்டிகளுக்கும் கட்டாயமாக மீற்றர் பொருத்துவதற்கான புதியசட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கும் பயணிகளின் பயணத்தூரத்துக்கு அமைவாக பயணச்சீட்டை வழங்குவதற்குமான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பயணிகள் கடந்தகாலங்களில் எதிர்நோக்கிய அசெளகரியங்களை கருத்திற்கொண்டு இந்த புதிய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டி தொடர்பாக புதிய விதிமுறைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் அனைத்து முச்சக்கரவண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அனைத்துமுச்சக்கரவண்டிகளிலும் சாரதி ஆசனத்திற்கு பின்புறமாக வாகனத்தின் பதிவிலக்கம், சாரதியின் பெயர், சாரதியின் புகைப்படம் என்பன காட்சிப்படுத்தப்படவேண்டும் என்றும் பயணிகள் போக்குவரத்தின் போது குறுகிய வீதிகளினூடாக பயணிப்பதற்கு சாரதி கடமைப்பட்டுள்ளார் என வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலானது போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சரின் கையொப்பத்துடன் மோட்டார் வாகனப் போக்குவரத்துசட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஜனவரி 09 ஆம் திகதிவெளியிடப்பட்டுள்ள 2001/2 என்ற இலக்கத்தினுடைய விஷேட வர்த்தமானி அறிவித்தலின்படி பயணிகள் பயணத்தினை நிறைவுசெய்து கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படுவதும் சாரதிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கரவண்டிகள் தொடர்பிலும் மேலும் பல விதிமுறைகளை உள்ளடக்கியதாக இந்தவர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com