ilakkiyainfo

முதன்முறையாக மகள்கள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா

முதன்முறையாக மகள்கள் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நதியா
April 20
14:04 2020
தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா.
உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
1988-ல் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு சனம், ஜனா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2004-ல் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அக்கா, அம்மா, அண்ணி என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார்.

சமூக வலைத்தளங்களை விட்டு ஒதுங்கி இருந்த நதியா, சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அதில் அவரது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது குடும்பத்தினருடன் ஜப்பான் சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் மகள்களோடு இருக்கும் புகைப்படங்களும் உள்ளன.
இதுவரை மகள்களை வெளியுலக்குக்கு காட்டாமல் இருந்த நதியா, முதல் தடவையாக அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதால் அவை வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் நதியாவுக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா? என்று ஆச்சரியத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com