ilakkiyainfo

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
October 16
21:13 2018

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு டிசம்பர் மாதம் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

வடக்கு மாகாண மீன் பிடித்துறை அமைச்சராக இருந்த பி.​டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அந்த அமைச்சு பதவியில் இருந்து நீக்க கடந்த ஆண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பி.​ டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதன்படி பி.​டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன் பிடித்துறை அமைச்சர் பி.​டெனிஸ்வரன் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பி.​ டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com