ilakkiyainfo

முன் சக்கரங்கள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கி பயணிகளைக் காப்பாற்றிய விமானி

முன் சக்கரங்கள் இல்லாமல் விமானத்தைத் தரை இறக்கி பயணிகளைக் காப்பாற்றிய விமானி
May 12
17:12 2019

விமானத்தின் மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே நகர்ந்தது.

விமானத்தின் லேண்டிங் கியர் வேலை செய்யாததால், முன் சக்கரங்கள் இல்லாமலேயே மியான்மர் நாட்டைச் சேர்ந்த விமானி ஒருவர் தாம் இயக்கிய விமானத்தைத் தரை இறக்கினார்.

மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் மாண்டலே விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நிற்கும் முன் அதன் முன் அடிப்பகுதி ஓடுதளத்தில் உரசியது.

அந்த எம்ரேர் 190 ரக விமானத்தில் இருந்த 89 பயணிகளுக்கும் காயம் எதுவும் ஏற்படாமல் சாமர்த்தியமாக விமானத்தை இறக்கியதற்காக பாராட்டப்பட்டு வருகிறார் கேப்டன் மியாட் மோ ஆங்.

11106230-3x2-700x467லேண்டிங் கியர் வெளியே வந்து விட்டதா என்பதை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் உறுதி செய்வதற்காக கேப்டன் மியாட் மோ ஆங், அந்த விமான நிலையத்தைச் சுற்றி இரு முறை வானில் வட்டமடித்ததாக மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

விமான உற்பத்தி துறையில் களமிறங்கிய சீனா – போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா?

11106232-3x2-700x467யங்கூனில் இருந்து மாண்டலே வந்த அந்த விமானத்தின் எடையைக் குறைப்பதற்காக, தரை இறங்கும் முன்னர், வேகமாக எரிபொருளைப் பயன்படுத்தித் தீர்க்கும் அவசரகால வழிமுறையைக் கேப்டன் மியாட் பின்பற்றினார்.
படத்தின் காப்புரிமை Reuters

விமானத்தின் மூக்குப் பகுதியின் அடிப்பாகம் 25 நொடிகள் கீழே உரசியபடியே நகர்ந்தபின், அந்த விமானம் நின்றதை அப்போது எடுக்கப்பட்ட காணொளி காட்டுகிறது.

இது ஒரே வாரத்தில் மியான்மரில் நடக்கும் இரண்டாவது விமானப் போக்குவரத்துக் கோளாறாகும்.

புதனன்று பிமான் பங்களாதேஷ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஓடுதளத்தில் இருந்து சறுக்கி விலகியதால் 17 பயணிகள் காயமடைந்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2020
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com