ilakkiyainfo

முறை­யற்ற காதலால் துய­ருற்றுப் போன வாழ்வு!!

முறை­யற்ற காதலால் துய­ருற்றுப் போன வாழ்வு!!
April 21
08:12 2016

செய்த தவறை எண்ணி வருந்­து­வ­தினால் மட்டும் நான் தவறு செய்­ய­வில்­லை­யென்­றா­கி­விடாது. அவளின் மீதி­ருந்த ஆசை, காதல் எல்லாம் என்னை முட்­டா­ளாக்­கி­யது. இதனால் தான் பண்­பாட்டை இழந்து நடந்­து­கொண்டேன். “

இது கொலைக்­குற்­றத்­துக்­காக சிறையில் தண்­டனை அனு­ப­வித்­து­வரும் ரொஹானின் உள்­ளக்­கு­மு­ற­லாகும். ரொஹான் தொடர்ந்து மனம் திறந்து பேசு­கையில்,

“என்­னு­டைய குடும்­பத்தில் பெரி­தாக வச­தி­வாய்ப்­புகள் இருக்­க­வில்லை. எப்­ப­டி­யா­வது படிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற வெறி சிறு­வ­யது முதலே என்னுள் இருந்­த­மையால் பெரும் சிர­மங்­க­ளுக்கு மத்­தி­யிலும் நான் இடைவிடாது கல்­வி­கற்றேன்.

எனக்கு ஒரு தம்­பியும், தங்­கையும் இருந்­தார்கள். அவர்கள் இரு­வரும் ஒன்­றாகப் பிறந்த இரட்டை குழந்­தைகள்.

நான் கல்விப் பொதுத்­த­ரா­தர உயர்­தர பரீட்சை எழுதி சிறந்த பெறு­பே­று­களை பெற்று பல்­க­லைக்­க­ழ­கத்­துக்குத் தெரிவானேன்.

அங்கு முதல் இரண்டு வரு­டங்கள் அப்பா செல­வுக்குப் பணம் அனுப்­பினார். அதன்பின் நான் தனியார் வகுப்­பு­க­ளுக்கு படிப்­பிக்கச் சென்று அந்தப் பணத்தில் என்­னு­டைய செல­வு­களை பார்த்­துக்­கொண்டேன்.

ஒவ்­வொரு நாளும் சீக்­கி­ர­மாக பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்து தொழி­லொன்­றுக்கு சென்று என்­னு­டைய பெற்­றோரின் சுமையை குறைக்க வேண்டும் என்றே நினைத்தேன்.

அதன்­படி பட்­டப்­ப­டிப்பை நிறை­வு­செய்த கையோடு நான் தொழி­லுக்கு செல்ல ஆரம்­பித்தேன். எனினும், அந்த வேலை என் படிப்­புக்கு ஏற்­றாற்போல் அமை­ய­வில்லை.

குடும்­பத்தின் பொரு­ளா­தார நிலையை கருத்­திற்­கொண்டு நான் தொடர்ந்து அங்கு வேலைக்குச் சென்றேன். அது­மட்­டு­மின்றி சிர­மத்தைப் பார்க்­காது அங்கு கிடைக்கும் சம்­ப­ளத்­துக்கு மேல­தி­க­மாக தனியார் வகுப்­பு­க­ளுக்கும் சென்று படிப்பிக்க ஆரம்­பித்தேன்.

கட­வுளே! என்று நான் சம்­பா­திக்கும் பணம் குடும்­பத்தின் செல­வு­க­ளுக்குப் போது­மா­ன­தா­க­வி­ருந்­தது.

அந்­த­த­ரு­ணத்தில் எங்­க­ளு­டைய வீட்டை திருத்­தி­ய­மைப்­பது, தம்பி, தங்­கையை நன்­றாக படிக்க வைப்­பது, அம்மா, அப்பாவை பார்த்­துக்­கொள்­வது என்று எனக்கு நிறையக் கட­மைகள் இருந்­தன.

எனவே அவற்றை நல்ல முறையில் செய்து முடிக்க திட்­ட­மிட்டு செலவு செய்து பணத்தை சேமித்­துக்­கொண்டேன்.

ஒரு­வ­ழியாய் நான் கஷ்­டப்­பட்­ட­தற்கு பலன் கிடைத்­தது போல் தம்­பி­யும், தங்­கையும் உயர்­தரப் பரீட்­சையில் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்று பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வா­னார்கள்.

அன்று எனது குடும்­பத்தில் மகிழ்ச்­சிக்கு குறை­வி­ருக்­க­வில்லை. அது­மட்­டு­மின்றி நான் கல்­வி­ கற்­பித்த மாண­வர்­களும் கணிதம், விஞ்­ஞானம் போன்ற பாடங்­களில் சிறந்த பெறு­பே­று­களைப் பெற்று என்னை பெரு­மைப்­ப­டுத்­தி­னார்கள்.

எனக்கு நண்­பர்கள் என்றோ காதலி என்றோ யாரும் இருக்­க­வில்லை. நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்னர் மிகவும்பின்தங்கிய கிரா­ம­மொன்­றி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் ஆசி­ரி­ய­ராக நிய­மனம் கிடைத்­தது. எனவே, நான் சில காலம் எனது வீட்டை விட்டுப் பிரிந்­தி­ருக்க நேர்ந்­தது.

நான் என்­னு­டைய தொழில் நிமித்தம் அக்­கி­ரா­மத்­துக்கு சென்றேன். அங்கு ஆசி­ரி­யர்­க­ளுக்கு என்று தனி­யாக இல்­லங்கள் எதுவும் இருக்­க­வில்லை.

எனவே, எனக்கு அக்­கி­ரா­மத்தின் கிராம சேவ­கரின் வீட்டில் தங்­கு­வ­தற்கு இடம் கிடைத்­தது. அந்த வீட்டில் கிராம சேவ­கரும் ,அவ­ரு­டைய மனை­வியும், மகளும் மட்­டுமே இருந்­தார்கள்.

அவர்கள் அனை­வரும் என்னை நன்­றாகப் பார்த்­துக்­கொண்­டார்கள். நான் அங்கு ஆறு வரு­டங்கள் இருந்தேன். எனினும், என்­னு­டைய தந்தை உயி­ரி­ழந்­ததன் பின்னர் எனக்கு குடும்­பத்­தி­ன­ருடன் இருக்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது.

நான் நகர்ப் புற பாட­சா­லை­யொன்­றுக்கு இட­மாற்றம் வாங்­கிக்­கொண்டு சென்­று­விட்டேன்.

அச்­சந்­தர்ப்­பத்தில் தம்­பியும், தங்­கையும் பட்­டப்­ப­டிப்பை முடித்து தொழி­லுக்கு சென்­றி­ருந்­தார்கள். எனவே எனக்கு குடும்ப பொறுப்பு சற்றுக் குறைந்­தி­ருந்­தது.

இது இவ்­வா­றி­ருக்க, அம்மா என்னை திரு­மணம் செய்­து­கொள்­ளு­மாறு அடிக்­கடி தொந்­த­ரவு செய்தார். நான் தங்­கையின் திரு­மணம் நடந்து முடிந்­ததன் பின்னர் திரு­மணம் செய்­து­கொள்­கின்றேன் என்று கூறி தட்­டிக்­க­ழித்தேன்.

எனவே அம்மா, தங்­கைக்கு விரை­வாக வரன் பார்க்க ஆரம்­பித்தார். இத­னி­டையே தங்­கையும் பல்­க­லைக்­க­ழ­கத்தில் அவளுடன் ஒன்­றாகப் படித்த இளைஞன் ஒரு­வனை காத­லிக்­கின்றாள் என்­பது தெரி­ய­வந்­தது.

எனவே நாங்கள் அதற்கு எந்­த­வித எதிர்ப்பும் தெரி­விக்­க­வில்லை. அவளின் விருப்­பத்­துக்­குக்­கேற்­பவே அந்த பையனை அவ­ளுக்கு திரு­மணம் செய்து வைத்தோம்.

அதன்பின் தம்­பியும் வெளி­நாட்டில் தொழி­லொன்று கிடைத்து சென்­று­விட்­ட­மையால், அம்­மா­வுக்குத் துணை­யாக திரு­மணம் முடித்த கையோடு தங்கை அவ­ளு­டைய கண­வ­ருடன் எங்கள் வீட்­டி­லேயே தங்­கி­விட்டாள்.

இத­னை­த்தொ­டர்ந்தே அம்­மாவும் தங்­கையும் இணைந்து மும்­மு­ர­மாக எனக்கு மண­மகள் தேட ஆரம்­பித்­தார்கள். எனினும், அதில் ஒன்­று­கூட என் மன­துக்குப் பிடிக்­க­வில்லை. நான் அவை அனைத்­தையும் ஏதோ­வொரு கார­ணத்தை கூறி தட்­டிக்­க­ழித்தேன்.

இத­னி­டையே சில மாண­வர்­களின் வீடு­க­ளுக்கு சென்று விசேட வகுப்­பு­க­ளையும் நடாத்தி பணம் சம்­பா­தித்தேன்.

இவ்­வாறு நான் செல்லும் வீடொன்­றி­லி­ருந்த  இளம் தாயொ­ரு­வ­ருக்கும், எனக்கும் மெல்ல மெல்ல நட்பு துளிர்­விட ஆரம்­பித்­தது.

அவள் தான் மீனா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது.) பார்ப்­ப­தற்கு இள­மை­யா­கவும், அழ­கா­கவும் காட்­சி­ய­ளிப்பாள்.

மீனா­வுக்கு தாய், தந்தை, சகோ­தர, சகோ­த­ரிகள் என்று யாரு­மில்லை. சிறுவர் இல்­ல­மொன்­றி­லேயே வளர்ந்­துள்ளார். அதன்பின் கண­வரின் பெற்­றோரின் எதிர்ப்­பு­க­ளுக்கு மத்­தி­யி­லேயே திரு­மணம் செய்­துள்ளார்.

அவ­ளு­டைய கணவர் வெளி­நாட்டில் தொழில் புரிந்த நிலையில் ஒரே மக­னுடன் தனி­யாக வசித்து வந்தாள். கணவர் 6 வரு­டங்­க­ளுக்கு ஒரு தட­வைதான் இலங்­கைக்கு வந்து போவார்.

எனக்கும் மீனா­வுக்கும் இடையில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக இனம்­பு­ரி­யாத உற­வொன்று ஏற்­பட ஆரம்­பித்­தது.

அவள் எவ்­வித ஒளி­வு­ம­றை­வு­மின்றி என்­னிடம் எல்லா விட­யங்­க­ளையும் பகிர்ந்­து­கொண்டாள். பல நாள் நான் அம்­மா­விடம் பொய் சொல்­லி­விட்டு இரவு மீனாவின் வீட்­டி­லேயே சாப்­பிட்­டு­விட்டு வருவேன்.

மீனாவின் மகனும் என்­னிடம் மிக அன்­பாகப் பழ­குவான். சிறு­வ­யது முதலே அவ­னு­டைய தந்தை அவ­ன­ருகில் இல்­லாத கார­ணத்­தினால் என்­னிடம் அந்த அன்பை எதிர்­பார்த்தான். மீனாவும் அவ்­வாறே.

பல நாள் எனக்கும் இப்­ப­டி­யா­ன­தொரு அழ­கான குடும்பம் இருந்தால் எவ்­வ­ளவு நன்­றா­க­வி­ருக்­கு­மென்று நான் நினைத்திருக்­கின்றேன்.

அது­மட்­டு­மின்றி, என்னை அறி­யா­மலே நான் மீனாவை காத­லிக்­கவும் ஆரம்­பித்தேன்.
அவளும் என்னை காத­லித்தாள். எனினும், அந்த மகிழ்ச்சி எனக்கு வெகு நாட்கள் நீடிக்­க­வில்லை.

மீனாவின் கணவன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரவே, என்னால் அங்கு போய் வரு­வது இய­லாத காரி­யமாய்ப் போனது. ஆயினும், அவர்­களை பார்க்க முடி­யாமல் பல நாள் ஏங்­கினேன்.

இறு­தியில் மீனாவின் மக­னுக்கு பாடம் கற்­பிக்கப் போவது போல் வாரத்தில் சில நாட்கள் அங்கு போய் வந்தேன்.

மீனாவின் கணவர் என்ன நினைத்­தாரோ தெரி­ய­வில்லை. என்­னு­டைய வருகை அவர் மனதில் சந்­தே­கத்தை ஏற்படுத்தியது.

அது­மட்­டு­மின்றி அவர் வெளி­நாட்­டி­லி­ருந்த நாட்­களில் நான் அங்கு வந்து சென்­ற­தையும் அய­ல­வர்கள் பலர் அவ­ரிடம் பல­வாறு சொல்­லி­யி­ருந்­தார்கள்.

இவை­ய­னைத்­தையும் கேட்ட அவர் ஒருநாள் நான் அங்கு சென்­றி­ருந்த போது “இனிமேல் நீ எக்­கா­ரணம் கொண்டும் இங்கு வரக்­கூ­டாது ” என்­று­கூறி என்னை அங்­கி­ருந்து போகச் சொன்னார்.

நானும் எது­வுமே பேசாமல் அங்­கி­ருந்து வந்­து­விட்டேன்.

எனினும் எனக்கு மீனாவின் பிரிவை தாங்­கிக்­கொள்ள முடி­யாமல் போனது. மீனா­வுக்கும் எனக்கும் இடை­யி­லி­ருந்த உறவு நிரந்­த­ர­மற்­றது என்­பதை அறிந்த போதிலும் மீனாவை எனது சொந்­த­மாக்­கிக்­கொள்­ளவே என் மனம் துடித்­தது.

நான் மீனா­வுடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு கதைத்தேன். அப்­போது மீனா, “‘ இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுங்கள் கணவர் வெளி­நாட்­டுக்கு சென்­று­வி­டுவார்” என்று கூறினார்.

எனினும் எனக்கு அவ்­வ­ளவு பொறு­மை­யி­ருக்­க­வில்லை. நான் மீனாவின் மீதுள்ள காத­லினால் பைத்தியமாகியிருந்தேன்.

இதனால் மீனாவின் கணவர் வெளி­நாட்­டுக்கு செல்ல ஒரு வாரம் இருக்கும் போது நான் அவர்­க­ளு­டைய வீட்­டுக்கு சென்று அவ­ளு­டைய கண­வ­ருடன் முரண்­பட ஆரம்­பித்தேன்.

வார்த்தை முற்றி இரு­வரும் சண்­டை­யிட்டுக் கொண்டோம். இறு­தியில் நான் அவரை பல­மாகத் தாக்க அவர் நிலத்தில் வீழ்ந்தார்.

அது­மட்­டு­மின்றி அவர் வீழ்ந்ததன் பின்­னரும் நான் அவரை விடாது தாக்­கினேன். இந்­நி­லையில் பலத்த காயங்­க­ளுக்­குள்­ளான அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அப்­போது அவர் சுய­நி­னை­வி­ழந்து இருந்தார்.

மீனா அவரை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்கும் போது கீழே வீழ்ந்து காயங்­க­ளுக்­குள்­ளானார் என்றே வைத்­தி­யர்­க­ளிடம் கூறி­யி­ருந்தார்.

எனினும், இரண்டு நாட்­களின் பின்னர் அவ­ருக்கு சுய­நி­னைவு வந்­தது. எனவே, பொலி­ஸாரை வர­ச்சொல்லி எனக்கும், மீனா­வுக்கும் இடையில் இருந்து வந்த தகாத உறவின் கார­ண­மாகத் தான் நான் அவரை கொலை­செய்ய முயற்­சித்தேன் என்று வாக்­கு­மூலம் வழங்­கி­யி­ருந்தார்.

அதன்­படி நான் பொலி­ஸாரால் கைது ­செய்­யப்­பட்டேன்.

அது­மட்­டு­மின்றி, இரண்டு நாட்­களின் பின்னர் சிகிச்சை பய­ள­னிக்­காத நிலையில் அவர் உயி­ரி­ழந்து விட்டார். அதனைத்தொ­டர்ந்து அவ­ரு­டைய குடும்­பத்­தி­னரும் எனக்­கெ­தி­ராக வலு­வான சாட்­சி­யங்­களை நீதி­மன்­றத்தில் சமர்ப்பித்தார்கள். அதன்பின்னர் எனக்கு சிறைத் தண்டனை என்பதும் உறுதியானது.

மேலும் மீனாவின் கணவரின் குடும்பத்தினர் அவளிருந்த வீட்டிலிருந்தும் அவளை துரத்திவிட்டார்கள். அதன்பின்னர் மீனா எங்கள் வீட்டுக்கே தஞ்சமென்று வந்துவிட்டாள். எனது அம்மாவும், தங்கையும் மீனாவின் நிலைமையறிந்து அவளை ஏற்றுக்கொண்டார்கள்.

இன்று என்னுடைய வயதான தாயை பார்த்துக்கொண்டு மீனா வீட்டிலிருக்கின்றாள். நான் சிறையிலிருந்து விடுதலையாகியவுடன் மீனாவுடன். என்னுடைய இறுதிக்காலத்தை கழிக்கும் எதிர்பார்ப்பிலேயே என்னுடைய விடுதலை நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.

-வசந்தா அருள்ரட்ணம்-

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com