ilakkiyainfo

முற்றவெளி விவகாரத்தை வடக்கு முதல்வர் கையாண்டிருக்க முடியும்: எதிர்க்கட்சி தலைவர்!!

முற்றவெளி விவகாரத்தை வடக்கு முதல்வர் கையாண்டிருக்க முடியும்: எதிர்க்கட்சி தலைவர்!!
December 25
18:16 2017

விகாராதிபதியின் பூதவுடல் யாழ். முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டமைக்காக அரசாங்கத்தை சாடுவது அபத்தமானது எனவும் அதனை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், யாழ்.மாநகரசபை ஆணையாளருமே தடுத்திருக்க வேண்டும் என்றும் வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யாழ். ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி இயற்கை எய்திய நிலையில் அவருடைய பூதவுடல் யாழ்.முற்றவெளி மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை மக்களும், ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் முன்வைக்கின்றன.

விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவது தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது யாழ்.மாநகரசபை நடவடிக்கை எடுத்திருக்க முடியும். முற்றவெளி மைதானம் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானதாக இருந்தாலும், அந்த மைதான வளாகத்தில் ஒருவரின் உடலை தகனம் செய்வதற்கு நிச்சயமாக யாழ்.மாநகர சபையிடம் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும்.

காரணம் மயானங்கள் சம்பந்தமான சட்டங்கள் உள்ளூராட்சி சபையிடம் இருக்கின்றது.

எனவே உள்ளூராட்சி அமைச்சர் என்ற அடிப்படையில் வடமாகாண முதலமைச்சர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்திருக்க வேண்டும். அல்லது யாழ்.மாநகரசபை நீ திமன்றத்தை நாடி தடுத்திருக்கவேண்டும்.

எனவே பிழைகளை நம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களை குற்றம் காண்பது மிக பிழையான ஒரு நடவடிக்கையாகும். முதலில் நாங்கள் எங்களை திருத்தி கொள்ளவேண்டும்.

வெறுமனே அறிக்கை விடுவதிலும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாலும் ஆவது ஒன்றுமில்லை. எனவே மக்களும் சரி, சமூக வலைத்தளங்களும் சரி, ஊடகங்களும் சரி உண்மையை சரியாக உணர்ந்து கொள்ளவேண்டும். அதனை செய்யாமல் அரசை எதற்கெடுத்தாலும் குற்றஞ்சாட்டுவதால் எந்த பயனும் இல்லை” என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com