ilakkiyainfo

முள்ளிவாய்க்காலில் நீண்ட காலத்தின் பின் பயன்படுத்தக் கூடிய வகையில் பெரிய ஆயுதக் கிடங்கு!(படங்கள்)

முள்ளிவாய்க்காலில் நீண்ட காலத்தின் பின் பயன்படுத்தக் கூடிய வகையில் பெரிய ஆயுதக் கிடங்கு!(படங்கள்)
May 12
04:40 2014

1399777503mulli03

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து இந்த மாதத்துடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடகின்ற நிலையில், மிகப்பெரியளவிலான ஆயுதக் கிடங்கு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

39a270f3580d662f6bf67e175da34c4dமுல்லைத்தீவில் இறுதிப் போர் நடந்த வெள்ளமுள்ளிவாய்க்கால் என்ற இடத்தில், கடற்கரையோரமாக இந்த ஆயுதக்கிடங்கு நேற்று முந்தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

1399777503mulli01இந்த ஆயுதக்கிடங்கில் இருந்து 56 ஆயிரம் மக்னம் பிஸ்டல் துப்பாக்கி ரவைகள், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் 9 மி.மீ ரவைகள், மற்றும் 12 போர் வேட்டைத்துப்பாக்கிகளுக்கான ரவைகள் 2750 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

1399777502mulli02இன்னும் 10 ஆண்டுகள் கழித்தும் கூடப் பயன்படுத்தக் கூடிய வகையில், இந்த ரவைகள், கிறீஸ் பூசப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

1399777504mullaiஉள்ளூர் மீனவர்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து, கிழக்கு கடற்படைத் தலைமையகம் இவற்றை மீட்டுள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், 2009ம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்துக்குப் பின்னர், கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய தனி ஆயுதக்கிடங்கு இதுவென்றும் சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com