Site icon ilakkiyainfo

முஸ்லிம் ஒருவருடன் காதல் : மருமகளின் கண்ணை தோண்டி மணிக்கட்டை வெட்டிய மாமனா

முஸ்லிம் ஒருவருடன் தனது மருமகளுக்கு காதல் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து மருமகளின் கண்களை கத்தியால் தோண்டியெடுத்து அவரை குருடாக்கியதுடன் அவரது மணிக்கட்டையும் வெட்டிய சீக்கிய மாமனார் ஒருவருக்கு 10 வருட சிறைத் தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

கிழக்கு லண்டனில் இல்போர்ட் எனும் இடத்தைச் சேர்ந்த மனிஜித் சிங் மிர்கின் (51வயது) என்ற மாமனாரே தனது மருமகளான ஜகீர் மிர்கீனட்டை இவ்வாறு கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

ஜகீரின் கணவரின் தந்தையான மன்ஜித் ஜகீரின் 3வயது மற்றும் 6வயது பிள்ளைகளின் முன்பாகவே இந்தக் கொடூர தாக்கதுதலை நடத்தியுள்ளார்.

ஜகீருக்கு பாகிஸ்தானியர் ஒருவரிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வருவதை அவதானித்த மன்ஜித் அந்தப் பாகிஸ்தானியருக்கும் ஜகீருக்குமிடையே இரகசிய காதல் தொடர்பு உள்ளதாக சந்தேகித்தே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். ர

Exit mobile version