மூதூரில் 16 வயது மாணவன் ஒருவர் ஆற்றில் மூழ்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

ஜின்னா நகர் மூதூர் – 02  ஐச் சேர்ந்த க.பொ.த சாதாரன தர மாணவன் நஜீப் அதீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் அவரது நண்பர்களுடன் ஆலிம்சேனை எனப்படும் இடத்திலுள்ள ஆறு ஒன்றில் மதியம் 1 மணியளவில் குளிக்கச் சென்றவேளையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர் அவ்விடத்தில் இருந்த பொதுமக்களின் உதவியுடன் அவர்  காப்பாற்றப்பட்டு மூதூர் வைத்தியசாலைக்கு 3 மணியளவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்துள்ளதாக மரண விசாரனை அதிகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாணவனின் உடலை மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் குடும்பத்தினரிடம் 7 மணியளவில் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த இடத்தில் நீராடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பிரதேச சபைத் தவிசாளரிடம் வேண்டுகோள் ஒன்றினையும் மரணவிசாரனை அதிகாரி விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.