Site icon ilakkiyainfo

மூன்று மாதங்களில் தொடர்ந்த காய் நகர்த்தலில் வசமாக சிக்கிய ‘ஹெரேயின்யின் பிறதர்ஸ்’ (வீடியோ)

அதி சொகுசு காரில் தொடர்ந்த கடத்தலுக்கு களனியில் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி

சரன் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் ஒற்றன். அடிக்­கடி பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு தகவல் வழங்கும் சரன் இற்­றைக்கு மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் அதி­ர­டிப்­ப­டையின் புல­னாய்வுப் பிரி­வுக்கு தொடர்­பினை ஏற்­ப­டுத்­து­கின்றார்.

‘ சேர்… நான் சரன்… பெரி­ய­ளவில் போதைப் பொருள் வியா­பாரம் ஒன்று இடம்­பெற்று வரு­கின்­றது… காரில் போகி­றார்கள், வரு­கி­றார்கள்….சுற்­றி­வ­ளைப் ­பொன்றை மேற்­கொண்டால் கைது செய்­யலாம்…’ என பல தக­வல்­களை வழங்­கி­யதும் தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டது.

தமக்கு மிக விசு­வா­ச­மான ஒற்றன் வழங்­கிய தக­வல்­களை சரி­பார்த்­துக்­கொண்ட அதி­ர­டிப்­படை புல­னாய்வுப் பிரிவு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அந்த தக­வல்­களை நட­வ­டிக்கை பிரி­வுக்கு கைமாற்­றி­யது.

இந் நிலையில் நட­வ­டிக்கை பிரி­வா­னது மிக சூட்­சு­ம­மாக நட­வ­டிக்­கை­யினை முன்­னெ­டுத்­தது. பல முறை இந்த போதைப் பொருள் வர்த்­தகம் தொடர்பில் சந்­தேக நபர்­களை கைது செய்ய சென்ற போதும் அவர்கள் அதி­ர­டிப்­ப­டையின் வலையில் சிக்­க­வில்லை.

எனினும் அதி­ர­டிப்­ப­டை­யினர் தள­ர­வில்லை. திட்டம் மேல் திட்டம் வகுத்­தனர். ‘ ஓடு மீன் ஓட உறு மீன் வரு­ம­ளவில் வாடிக்­காத்­தி­ருக்­குமாம் கொக்கு என்­பதைப் போல் சரி­யான சந்­தர்ப்­பத்­துக்காய் அதி­ர­டிப்­ப­டை­யினர் காத்­தி­ருந்­தனர்.

அன்று புதன் கிழமை. சர­னி­ட­மி­ருந்து புல­னாய்வுப் பிரி­வுக்கு மீண்டும் அழைப்பு வந்­தது. ‘ சேர்…அவர்கள் ஏதோ செய்ய போகின்­றார்கள்…திட்­ட­மிட்டால் கைது செய்­யலாம்..’ என்ற தோர­ணையில் பேசி­யதும் தகவல் நட­வ­டிக்கை பிரி­வுக்கு வழங்­கப்­பட்­டது.

பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் பதில் கட்­டளை அதி­கா­ரி­யான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ரஞ்சித் பத்ம­சி­றிக்கு தகவல் வழங்­கப்­பட்­டதும் நட­வ­டிக்கை குழுவை உடன் தயார் செய்தார்.

உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சகர் ஒரு­வரின் கீழ் மூன்று சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­த­கர்­களைக் கொண்ட 40 பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ரஞ்சித் பத்­ம­சிறி நிய­மித்தார்.

ஒற்றன் சரனின் தக­வ­லுக்கு அமைய களனி- பிய­கம பிர­தான பாதையில் விசேட திட்­டத்­துடன் 40 பேர் கொண்ட அதி­ர­டிப்­படை குழு தயா­ரா­னது. களனி விஹா­ரையை அண்­மித்த பகு­தி­யில்­பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் உத்­தி­யோ­க­பூர்வ சீரு­டையில் சிலர் நிறுத்­தப்­பட்டு அங்கு தற்­கா­லிக சோதனை சாவடி ஒன்றும் அமைக்­கப்­பட்­டது.

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ரஞ்சித் பத்­ம­சி­றியின் ஆலோ­ச­னையின் கீழ் அதி­ர­டிப்­ப­டையின் திட்­டத்தின் பிர­காரம் பலர் சிவில் உடை­க­ளிலும் சிலர் உத்­தி­யோக பூர்வ சீரு­டை­யிலும் பிய­கம முதல் களனி வரை­யான பாதையில் பல இடங்­க­ளிலும் விளிப்­புடன் காத்­தி­ருந்­தனர்.

இந் நிலையில் பிய­கம பகு­தியில் இருந்து சிவப்பு நிற முச்­சக்­க­ர­வண்­டி­யொன்று களனிப் பிர­தே­சத்தை நோக்கி நகர்ந்­தது. டப்­ளியூ.பீ. 201 – – 9637 என்ற இலக்­கத்தை கொண்­டி­ருந்த அந்த முச்­சக்­க­ர­வண்­டியில் இருவர் இருந்­தனர். நடுத்­தர வயது மதிக்­கத்­தக்க அவ்­வி­ரு­வரில் ஒருவர் அந்த முச்­சக்­கர வண்­டியை செலுத்­திய நிலையில் மற்­றை­யவர் பின்­னா­ச­னத்தில் இருந்தார்.

களனிப் பிர­தே­சத்தை நோக்கி பய­ணித்த அந்த முச்­சக்­கர வண்டி அந்த பாதையின் குறிப்­பிட்ட ஒரு இடத்தில் நிறுத்­தப்­பட்­டது. இதன் போது அப்­ப­கு­தியில் ஏற்­க­னவே கிடைத்த புல­னாய்­வுத்­த­க­வல்­களின் அடிப்­ப­டையில் சிவில் உடையில் அதி­ர­டிப்­ப­டை­யினர் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

முச்­சக்­கர வண்டி நிறுத்­தப்­பட்ட இடத்தில் டப்­ளியூ.பீ கே.எஸ் – 0358 என்ற இலக்­கத்தை உடைய வெள்ளை நிற ‘ஹைப்ரட்’ ரக அதி சொகுசு கார் ஒன்று நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.
அதி சொகுசு காரில் தொடர்ந்த கடத்தலுக்கு களனியில் வைக்கப்பட்ட முற்றுப்புள்ளி
முச்­சக்­கர வண்­டியில் பின் ஆச­னத்தில் அமர்ந்து வந்த நபர், முச்­சக்­கர வண்­டி­யி­லி­ருந்து இறங்கி அந்த அதி சொகுசு காரின் சாரதி ஆச­னத்தில் அமர்­வதை அங்­கி­ருந்த அதி­ர­டிப்­ப­டை­யினர் அவ­தா­னித்­தனர்.

அடுத்து கண் இமைக்கும் சில வினா­டி­க­ளுக்குள் நின்­றி­ருந்த ‘ஹைப்ரட்’ கார் முன்னால் பய­ணிக்க முச்­சக்­கர வண்­டியோ காரின் பின்னால் தொடர்ந்து பய­ணித்­தது.

விடயம் களனி சோதனை சாவ­டியில் உள்ள அதி­ர­டிப்­படை அதி­கா­ரி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. உசார் நிலையில் இருந்த அதி­ர­டிப்­ப­டை­யினர் சோதனை சாவ­டியில் காரையும் முச்­சக்­க­ர­வண்­டி­யையும் நிறுத்­தினர்.

இரு வாக­னங்­களும் நிறுத்­தப்­பட்­டன. இரு சார­தி­களும் இறங்­கினர். தமது அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை காண்­பித்­தனர்.

அதி­ர­டிப்­ப­டை­யி­னரோ அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை பரி­சோ­திக்க நிறுத்­த­வில்லை என்­பதை அடுத்த சில கணங்­களில் அவ்­வி­ரு­வரும் புரிந்து கொண்­டனர். காரின் அருகே சென்ற அதி­ர­டிப்­படை வீரர் ஒருவர் காரை திறந்து அதனுள் இருந்த ஒரு உர­மூ­டையை வெளியே எடுத்தார்.

அதில் ஏதேதோ சில பொதிகள் இருந்­தன. அவற்றை சோதனை செய்த போது அவை போதைப் பொருளை ஒத்­தி­ருந்­தது. உடன் செயற்­பட்ட அதி­ர­டிப்­ப­டை­யினர் இரு­வ­ரையும் கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையின் தலை­மை­ய­கத்­துக்கு விசேட விசா­ர­ணை­களின் நிமித்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டனர்.

அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் தலை­மை­ய­கத்­துக்கு கொண்டு வரப்­பட்டு விசா­ரணை செய்­ததில் காரை செலுத்தி வந்­தவர் 37 வய­தான மரு­தானை பிர­தே­சத்தை சேர்ந்த செல்­வ­துரை ரவி­குமார் எனவும் முச்­சக்­கர வண்­டியில் பின் தொடர்ந்து வந்­தவர் 38 வய­து­டைய கொட்­டாஞ்­சேனை பிர­தே­சத்தை சேர்ந்த அவ­ரது அண்­ண­னான செல்­வ­துரை சுந்­தரராஜ் எனவும் தெரி­ய­வந்­தது.

அத்­துடன் காரில் இருந்தவை சுத்­த­மான ஹெரோயின் போதைப் பொருள் என தெரி­ய­வந்­த­துடன் அவை 85.5 கிலோ கிராம்கள் என கண்­ட­றி­யப்­பட்­டது.

மூன்று கிலோ கிராம்கள் கொண்ட 25 பொதிகள், ஒரு கிலோ கிராம் கொண்ட 10 பொதிகள் மற்றும் 500 கிராம் கொண்ட ஒரு பொதி என அவை பொதி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

SSP ரஞ்சித் பத்ம­சி­றி
இலங்­கையில் கைப்­பற்­றப்­படும் மிக கூடிய தொகை கொண்ட போதைப் பொருளின் வரி­சையில் இது இரண்டாம் இடத்தை வகிக்­கின்­றது. கைப்­பற்­றப்­பட்ட போதைப் பொருளின் பெறு­ம­தி­யா­னது சுமார் 68 கோடியே 31 இலட்­சத்து 45 ஆயிரம் ரூபா என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதனை அடுத்து இந்த இரு சந்­தேக நபர்­களும் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்கா­க பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள நிலையில் தற்­போது தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றனர்.

உலகின் கறுப்புப் பணம் புழங்கும் முதற்­தர வர்த்­த­க­மாக விளங்கும் போதைப் பொருள் வர்த்­த­கத்தை நாட்­டி­லி­ருந்து தூரப்­ப­டுத்த இலங்­கையில் உள்ள 435 பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு மேல­தி­க­மாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அதி­ர­டிப்­படை,சுங்கப் பிரிவு என பல நிறு­வ­கங்கள் பங்­க­ளிப்பு செய்து வரு­கின்­றன.

SSP அஜித் ரோஹன

விசேட அதிரடி படையினால்

2011 இலிருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட ஹெரோயின்களின் விபரம்

2011

சம்பவங்களின் எண்ணிக்கை – 15

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை 213g

ஹெரோயினின் பெறுமதி – 17,01,870 ரூபா

கைது செய்யப்பட்டவர்கள் 23 பேர்

2012

சம்பவங்களின் எண்ணிக்கை – 163

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை 3kg 163g

ஹெரோயினி பெறுமதி – 25272370 ரூபா

கைது செய்யப்பட்டவர்கள் 197 பேர்

2013

சம்பவங்களின் எண்ணிக்கை – 97

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை 2kg 521g

ஹெரோயினின் பெறுமதி – 20,14,2790 ரூபா

கைது செய்யப்பட்டவர்கள் 113 பேர்

2014 (இதுவரை)

சம்பவங்களின் எண்ணிக்கை – 34

கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் நிறை 85 kg 788g

ஹெரோயினின் பெறுமதி – 685446120 ரூபா

கைது செய்யப்பட்டவர்கள் 38 பேர்

எவ்­வா­றா­யினும்  போதைப் பொருள் தொடர்பில் ஏனைய  நிறு­வ­கங்­களால் முன்­னெ­டுக்­கப்­பட்டும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளி­னதும் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் உரிமை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கே உள்­ளது.

இந் நிலை­யி­லேயே சந்­தேக நபர்கள் அப்­பி­ரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் அஜித் ரோஹ­ணவின் தக­வல்­களின் பிர­காரம் தற்­போது இலங்கை நீதி­மன்­றங்­களில் போதைப் பொருள் தொடர்பில் 1006 வழக்­குகள் நிலு­வையில் உள்­ளன.

இதில் 421 வழக்­குகள் மேல் நீதி­மன்­றங்­க­ளிலும் 585 வழக்­குகள் நீதிவான் நீதி­மன்­றங்­க­ளிலும் உள்­ளன. அத்­துடன் கடந்த 5 வரு­டங்­களில் 175 பேருக்கு ஆயுள் தண்­ட­னையும் 55 பேருக்கு மரண தண்­ட­னையும் விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் 394 பேருக்கு பல வருட சிறை தண்­ட­னைகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டு­கின்றார்.

இதனை விட கடந்த வருடம் மட்டும் 1 கோடியே 75 இலட்­சத்து 200 ரூபா பணம் அர­சுக்கு போதைப் பொருள் குற்­ற­வா­ளி­க­ளி­ட­மி­ருந்து தண்­டப்­பண வரு­மா­ன­மாக கிடைக்கப் பெற்­றுள்­ளது.

அத்­துடன் கடந்த 6 மாதங்­களில் மட்டும் தெவுந்­தர தமிழ் உள்­ளிட்ட 9 சர்­வ­தேச போதைப் பொருள் வலைப்­பின்­ன­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் தற்­போது பாகிஸ்­தானில் அல்­லது டுபாயில் மறைந்­தி­ருக்­கின்றார் என சந்­தே­கிக்­கப்­படும் பிர­தான சர்­வ­தேச போதைப் பொருள் வர்த்­த­க­ரான மாளி­கா­வத்­தையை சேர்ந்த சித்தீக் என்­ப­வரையும் மேலும் பல­ரையும் கைது செய்ய சிவப்பு அறி­வித்தல் சர்­வ­தேச பொலி­ஸா­ருக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றா­ன­தொரு பின்­ன­ணி­யி­லேயே இந்த 85.5 கிலோ கிராம் நிறை­யு­டைய போதைப் பொருள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.இலங்­கைக்குள் போதைப் பொருள் கடத்­தப்­படும் மார்க்­க­மாக கடந்த நாட்­களில் தங்­காலை உள்­ளிட்ட கடல் மார்க்­கங்­களும் துறை­முகம் மற்றும் விமான நிலையம் என­பன அடையாளம் காணப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் பாகிஸ்­தா­னி­லி­ருந்தே பெரும்­பாலும் போதைப் பொருள் கடத்­தப்­படும் நிலையில் பிரவுன் சுகர் எனப்­படும் ஹெரோயின் ரக போதைப் பொருள் அதில் பிர­தா­ன­மா­ன­தாகும்.

கடந்த நாட்­களில் கராச்­சி­யி­லி­ருந்து கொள்­கலன் ஊடாக கட்­டிட உப­க­ர­ணங்கள்

என்ற போர்­வையில் 110 கிலோ கிராம் நிறை உடைய ஹெரோயின் நாட்­டுக்குள் கடத்­தப்­பட்­டி­ருந்­தது. இதுவே இலங்­கையில் கைப்­பற்­றப்­பட்ட அதி கூடிய நிறை கொண்ட போதைப் பொரு­ளாகும்.

இது தொடர்பில் சந்­தேக நபர்கள் அனை­வரும் கைது செய்­யப்­பட்டு விசா­ரணை கூட நிறை­வ­டைந்­துள்ள நிலையில் பிர­தான சந்­தேக நப­ரான பாகிஸ்­தானை சேர்ந்த சர்­தாரி கானை மட்டும் கைது செய்ய இராஜ தந்­திர மட்­டத்தில் நட­வ­டிக்­கைகள் முன்னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

இந் நிலையில் தற்­போது கைப்­பற்­றப்­பட்­டுள்ள போதைப் பொருள் பாகிஸ்­தா­னி­லி­ருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் ஒரு இடத்திலிருந்து  இன்னொரு இடத்துக்கு களஞ்சியப்படுத்தவோ அல்லது  விநியோகிக்கவோ இவ்வாறு எடுத்துச் சென்றிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அந்த போதைப் பொருள் தொகை எவ்வாறு இவர்களின் கைகளுக்கு கிடைத்தது என விசாரணை செய்யும் அதே சமயம் அவை யாருக்கெல்லாம் விநியோகம் செய்யப்படவிருந்தன, எங்கிருந்து எவ்வாறு இவர்களுக்கு பரிமாற்றப்பட்டது, இதன் பின்னணியில் யார் உள்ளார் போன்ற அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தடுப்புக்காவலில் கேள்விகளை தொடுத்து விசாரணைகளை செய்து வருகின்றது.

இலங்கையை போதைப் பொருள் மத்திய நிலையமாக பயன்படுத்த சில சர்வதேச போதைப் பொருள் வர்த்தகர்களும் சதிகாரர்களும் முயற்சிக்கும் நிலையில் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போதைப் பொருளை ஒழிக்க பொலிஸாருக்கு பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைக்க வேண்டும்.

Exit mobile version