ilakkiyainfo

மேஜர் ஜெனரல் உதய பெரேரா வீட்டில் இராணுவ கோப்ரல் மர்ம மரணம் – விசாரணைகள் ஆரம்பம்

மேஜர் ஜெனரல் உதய பெரேரா வீட்டில் இராணுவ கோப்ரல் மர்ம மரணம் – விசாரணைகள் ஆரம்பம்
April 10
11:05 2017

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் பணியில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

முதலில் அவர் விபத்தில் உயி­ரி­ழந்­த­தாக கூறப்­பட்டபோதிலும் அதன்பின்னர் அவர் தற்­கொலை செய்து கொண்­ட­தாக கூறி சிவில் உடை அணி­வித்து அவ­ரது சடலம் தம்­மிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தாக உயி­ரி­ழந்­த­வ­ரின் ­உ­ற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.

உயி­ரி­ழந்த லான்ஸ் கோப்ரல் டீ.எம். சென­வி­ரத்ன, மேற்­படி சிரேஷ்ட அதி­கா­ரியின் வீட்டில் சமை­யற்­கா­ர­ராக பணி­யாற்றி வந்ந்தார்.

இறு­தி­யாக அவர் விடு­மு­றையில் வீட்­டுக்கு வந்து கடந்த 31 ஆம் திகதி மீண்டும் கட­மைக்கு திரும்­பி­யி­ருந்­த­தா­கவும் தற்­கொலை செய்துகொள்ளும் அள­வுக்கு அவ­ருக்கு எவ்­வித பிரச்­சி­னையும் இருந்­தி­ருக்­க­வில்­லை­யென அவ­ரது உற­வி­னர்­களும் பெற்­றோரும் குற்றஞ்­சாட்­டி­யுள்­ளனர்.

Army-1கடந்த 6 ஆம் கெகி­ராவ கும்­புக்­வெவ பிர­தே­சத்­தி­லுள்ள மேற்­படி இரா­ணுவ வீரரின் வீட்­டுக்கு வந்த இரா­ணுவ அதி­கா­ரிகள் இருவர் திடீர் விபத்­தொன்றின் கார­ண­மாக மகன் ராகம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­த­தாக உயி­ரி­ழந்­த­வரின் தந்தை தெரி­வித்­துள்ளார்.

இதனை கேள்­வி­யுற்று மறுநாள் தனது உற­வி­னர்­க­ளுடன் ராகம வைத்­தி­ய­சா­லைக்கு சென்று பார்த்­த­போது, கடிதம் எழு­தி­வைத்து விட்டு மகன் தற்­கொலை செய்­து­கொண்டு உயி­ரி­ழந்­த­தாக இரா­ணுவ அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

எனினும் மரண சான்­றி­தழில் மர­ணத்­துக்­காக காரணம் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் எதிர்­வரும் 20 திகதி ராகம வைத்தியசாலையில் மரண பரி­சோ­த­னைகள் இடம்­பெறும் எனவும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாக அவரின் மேலும் தந்தை தெரி­வித்தார்.

அதன்­போது, இரா­ணுவ மரி­யா­தை­யுடன் அவ­ரது உடல் கொண்­டு­வ­ரப்­பட்டு நல்­ல­டக்கம் செய்­யப்­படும் என வைத்­தி­ய­சா­லையில் வைத்து இரா­ணு­வத்­தினர் கூறி­ய­போ­திலும் கடந்த 8 ஆம் திகதி சிவில் உடை­யி­லேயே சட­லத்­தினை கொண்­டு­வந்­த­தாக உயி­ரி­ழந்­த­வரின் உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.

இதனை ஒரு விவகாரம் ஆக்காமல் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்லுமாறு மேஜர் ஜெனரல் உதய பெரேரா கூறியிருக்கிறார்.

அத்­துடன் குறித்த லான்ஸ் கோப்ரல் கடிதம் எழுதி வைத்­து­விட்டு தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக கூறப்­பட்­டி­ருந்­த­போ­திலும் அக் ­க­டி­தத்­தி­லுள்ள கையெ­ழுத்து உயி­ரி­ழந்­த­வ­ரி­னது அல்­ல­வெ­னவும் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

மேற்­படி கார­ணி­களை கருத்­திற்­கொண்டு இரா­ணுவ வீரரின் மர­ணத்தில் சந்­தேகம் நில­வு­வ­தாக தெரி­வித்து இது தொடர்பில் உயி­ரி­ழந்­த­வரின் உற­வி­னர்கள் கெகி­ராவ பொலிஸ் நிலை­யத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்பாட்டின் பின்னர் கெகிராவ பதில் மாவட்ட நீதி வானினால் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலத்தை வைத்திய பரிசோதனைகளுக்காக மாவட்ட சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்குமாறு கெகிராவ பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மரண பரிசோதனைகளை மேற்கொள்வதற் கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com