ilakkiyainfo

மேற்கு வங்கத்தில் பதற வைக்கும் சம்பவம்: தாயின் விபரீத நடவடிக்கையில் இருந்து குழந்தையை காப்பாற்றிய உறவினர்கள்

மேற்கு வங்கத்தில் பதற வைக்கும் சம்பவம்: தாயின் விபரீத நடவடிக்கையில் இருந்து குழந்தையை காப்பாற்றிய உறவினர்கள்
June 28
16:01 2015

பெண் ஒருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற, நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், கோபால்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிரமிளா மோண்டல் (42). இவரது 4 வயது மகள் பாரதி.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதியின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரமிளாவின் மைத்துனர் தப்லு மோண்டல் அங்கு ஓடினார்.

அப்போது பிரமிளாவில் மடியில் இருந்த பாரதி அலறிக்கொண்டிருக்க, பிரமிளா தனது மகளின் தலைப் பகுதியில் தோலை அறுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பதறிப்போன தப்லுவும் அவரது மனைவியும், தலையில் பெருமளவு ரத்தம் வழிந்த பாரதியை மீட்டு, மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (எம்.எம்.சி.எச்) சேர்த்துள்ளனர்.

இதனிடையே தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் பிரமிளாவை கட்டி வைத்து அடித்துள்ளனர். நடந்த சம்பவத்தை பிரமிளா ஒப்புக் கொண்டார். எனினும் அதற்கான காரணத்தை அவரால் சொல்ல முடியவில்லை.

5 குழந்தைகளுக்கு தாயான பிரமிளா போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் கடந்த புதன்கிழமை மாலை முதல் சாராயம் குடித்து வந்ததாகவும் கிராமவாசிகள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

“5 மாதங்களுக்கு முன் பிரமிளா தனது மற்றொரு மகள் பார்வதிக்கு (8) தீவைக்க முயன்றார். இதனால் அக்குழந்தை பெரும்பாலும் தனது மாமா வீட்டில்தான் இருக்கும்” என்று சொனேகா என்ற பஞ்சாயத்து உறுப்பினர் கூறினார்.

இதனிடையே கிராம மக்களால் கட்டி வைக்கப்பட்ட பிரமிளாவை, மால்டாவின் இங்கிலிஷ் பஜார் காவல் நிலைய போலீஸார் வந்து மீட்டனர். “பிரமிளாவிடம் விசாரித்து வருகிறோம். இதுவரை அவர் மீது வழக்கு பதியவில்லை” என போலீஸார் நேற்று தெரிவித்தனர்.

இங்கிலீஷ் பஜார் வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்தா தே கூறும்போது, “இந்த சம்பவத்தில் தேவைப்பட்டால் சிறார் நீதிமன்றமும் குழந்தைகள் நல கமிட்டியும் தலையிடும். பிரமிளா வறுமையில் இருந்துள்ளார். என்றாலும் இந்த சம்பவத்துக்கு அதை காரணமாக கூறமுடியாது” என்றார்.

பிரமிளாவின் கணவர் ஹபு மோண்டல் ஓராண்டுக்கு முன் டெல்லி சென்றார். அங்கு கூலிவேலை செய்துவரும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

இத்தம்பதிக்கு 4 மகள்களும் 1 மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் பார்வதி, பாரதி மற்றும் ஸ்வர்னா என்ற 2 வயது மகனுடன் பிரமிளா வசித்து வந்தார். சம்பவ நாளன்று பார்வதி வீட்டில் இல்லை. 2 வயது மகன் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

pramila_2453371h

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com