ilakkiyainfo

மு.கா. மைத்திரியை ஆதரிக்கும் சாத்தியம்: அரசுடனான உறவு அருகிவருகிறது என்கிறார் ஹசன் அலி

மு.கா. மைத்திரியை ஆதரிக்கும் சாத்தியம்: அரசுடனான உறவு அருகிவருகிறது என்கிறார் ஹசன் அலி
December 02
21:50 2014

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் அழைப்பின் பேரில் கடந்த சனிக்­கி­ழமை மாலை அலரி மாளி­கையில் ஜனா­தி­ப­திக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்ற போதும் முஸ்லிம் காங்­கிரஸ் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறிசேனவையே ஆத­ரிக்கும் எனத் தெரிய வரு­கி­றது.

குறிப்­பிட்ட சந்­திப்பின் போது கடந்த காலங்­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் அவை தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­தாமை என்­பன பற்றி ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கப்­பட்­டது. பொது பல­சே­னாவின் நட­வ­டிக்­கைகள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனவும் சுட்டிக் காட்­டப்­பட்­டன.

வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிப்பு உட்­பட பிரச்­சி­னைகள் பற்றி விளக்­கப்­பட்­டன. அரசு வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­ப­டாமை என்­பன தொடர்பில் கவலை வெளி­யி­டப்­பட்­டது. அரசு வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­ப­டா­மை­யினால் சமூகம் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தா­கவும் ஜனா­தி­ப­தி­யிடம் எடுத்து விளக்­கப்­பட்­டது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் முறைப்­பா­டு­களை செவி­ம­டுத்த ஜனா­தி­பதி இவை தொடர்பில் உறு­தி­யான நிலைப்­பாட்­டினை தெரி­விக்­கா­மை­யினால் முஸ்லிம் காங்­கிரஸ் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தாக அறி­யக்­கி­டைக்­கி­றது.

முஸ்லிம் காங்­கி­ரஸின் முறைப்­பா­டு­களை செவி­மெ­டுத்த ஜனா­தி­பதி முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­க­ளுடன் கலந்து பேசி தீர்­வுகள் பெற்­றுக்­கொள்­ளலாம் எனத் தெரி­வித்­துள்ளார்.

சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்­க­ளுக்­கி­டை­யி­லான சந்­திப்­புக்­களை பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஏற்­பாடு செய்­ய­வுள்ளார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள் கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து ஜனாதிபதியின் மீது நம்­பிக்­கை­யி­ழந்­துள்­ளார்கள்.

கட்­சியின் ஒரு அமைச்­சரைத் தவிர ஏனையோர் பொது அபேட்­சகர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே ஆத­ரிக்க வேண்டும் என உறு­தி­யாக இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தத் தீர்­மானம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அர­சியல் உயர்­பீடம் கூடி வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலியை கேசரி தொடர்பு கொண்டு கட்­சியின் நிலைப்­பாடு தொடர்பில் வின­வி­ய­போது அர­சு­ட­னான முஸ்லிம் காங்­கி­ரஸின் உறவு தொடர்ந்து அருகி வருகிறது.

அரசு உறுதி மொழிகள் வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை. அரசுடன் இணைந்து போகும் சாத்தியக் கூறுகள் குறைவு. இது எனது சொந்தக் கருத்தாகும். கட்சியின் தீர்மானத்தை நாம் நாகரீகமாக வெளியிட வேண்டும் பொறுமை காக்க வேண்டும் என்றார்.

மைத்திரிபாலவை ஆதரிப்பதாக ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு

அடுத்தமாதம் 8ம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஜாதிக ஹெல உறுமய ஆதரவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தொடர்ந்து கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க,

jhu-maithri
“மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்ற பின்னர், அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர், மகிந்த ராஜபக்சவை எந்தவொரு தரப்பினரும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம்.

சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிக்க ஜாதிக ஹெல உறுமய முடிவு செய்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவுடன் தனியானதொரு புரிந்துணர்வு உடன்பாட்டில் ஜாதிக ஹெல உறுமய கையெழுத்திடும்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வில் ஜாதிக ஹெல உறுமய பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பணம் செலுத்தியது மைத்திரியின் முன்னணி : அன்னம் சின்னத்தில் போட்டி
02-12-2014

New-Democratic-Front-with--the-symbol-Swan
அன்னம் சின்னத்தில் போட்டியிடவுள்ள புதிய ஜனநாயக முன்னணி பொது ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபாலவின் சார்பில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளர் பெர்மிலா பெரேரா இராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினார்

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com