Site icon ilakkiyainfo

மோடியின் வரு­கையே எமது எதிர்­பார்ப்­பு: ஐ.நா.விசா­ர­ணை­யா­ளர்­களுக்கு அனு­மதி இல்­லை;பொலிஸ் அதிகாரமும் வழங்­கப்­படமாட்­டா­து என்­கிறார் ஜனா­தி­ப­தி

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு கட்­டாயம் விஜயம் செய்­ய­வேண்டும். இலங்கை மக்கள் இந்­திய பிர­த­மரின் வரு­கைக்­காக ஆர்­வ­மாக உள்ளனர்.

சீன ஜனா­தி­பதி மற்றும் ஜப்பான் பிர­தமர் ஆகியோர் இலங்­கைக்கு வர முடி­யு­மானால் ஏன் இந்­திய பிர­த­மரால் வர முடி­யாது. இவ்­வாறு மக்கள் கேட்கின்றனர் என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

இலங்­கையில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ரணை செய்யும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்குள் வரு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள். நாங்கள் இந்த விசா­ர­ணையை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதனை எதிர்க்­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

மேலும் எந்­த­வொரு சூழ்­நி­லை­யிலும் பொலிஸ் அதி­கா­ரங்கள் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­மாட்­டாது.பொலிஸ் அதி­கா­ரங்கள் மத்­திய அர­சாங்­கத்­தி­டமே இருக்கும். மாகாண சபைகள் தமது பிர­தே­சங்­களை நிர்­வாகம் செய்­வ­தற்­கான அதி­கா­ரங்­களை ஏற்­க­னவே கொண்­டுள்­ளன என்றும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கூறி­யுள்ளார்.

இலங்­கையில் செயற்­படும் வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர் களை நேற்று அலரி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­ய­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி அங்கு மேலும் கூறி­ய­தா­வது

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு கட்­டாயம் விஜயம் செய்­ய­வேண்டும். இலங்கை மக்கள் இந்­திய பிர­த­மரின் வரு­கைக்­காக ஆர்­வ­மாக உள்ளனர்.

சீன ஜனா­தி­பதி ஜப்பான் பிர­தமர் ஆகி­யோ­ரினால் இலங்­கைக்கு வர முடி­யு­மானால் ஏன் இந்­திய பிர­த­மரால் வர முடி­யாது. இவ்­வாறு மக்கள் கேட்­கின்­றனர் .

எனவே இந்­திய பிர­தமர் இலங்­கைக்கு வரு­வது மக்­களின் தேவை­யா­க­வுள்­ளது. நான் அவரை இறு­தி­யாக சந்­தித்­த­போது இலங்கை வரு­மாறு அழைத்தேன்.

நவம்பர் மாதம் நடை­பெறும் சார்க் மாநாட்­டிலும் நான் அவரை சந்­திப்பேன். சார்க் நாடு­களை பலப்­ப­டுத்­து­வதில் மோடி உறு­தி­யாக இருக்­கின்றார். தமிழ்­நாட்டில் வெளிப்­ப­டுத்­தப்­படும் எதிர்ப்­புக்கள் அனைத்தும் அர­சி­ய­லாகும். அவற்றை நான் பார­து­ர­மா­ன­தாக எடுக்­க­வில்லை.

சர்­வ­தேச நிபுணர் குழு

காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரிக்கும் ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்கும் சர்­வ­தேச நிபுணர் குழு­வுக்கு புதி­தாக இந்­தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடு­களை சேர்ந்த இரண்டு நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நிபு­ணர்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வார்கள். தமது வெளி­நாட்டு அனு­ப­வங்­க­ளைக்­கொண்டு ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்­கு­வார்கள். காணாமல் போனோர் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் கோரிக்­கைக்கு அமை­யவே இந்த நிபுணர் குழு நிய­மிக்­கப்­பட்­டது.

ஐக்­கிய நாடுகள் விசா­ரணை குழு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­றது என்­ப­தற்­காக உள்­ளுரில் விசா­ரணை செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வில்லை. 1988 மற்றும் 89 ஆம் ஆண்­டு­களில் காணாமல் போனோர் தொடர்­பாக நானும் செயற்­பட்­டி­ருந்தேன்.

அந்­த­வ­கையில் தற்­போதும் காணாமல் போனோர் தொடர்பில் கூறப்­ப­டு­கின்­றது. எனவே அதனால் இவ்­வா­றான ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. யாரும் இதில் முறைப்­பா­டு­களை செய்­யலாம். இந்தக் குழு­வுக்கு தற்­போது 20000 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன.

அறிக்கை வந்­ததும் பார்ப்போம்

காணாமல் போனோர் தொடர்­பான விசா­ரணை ஆணைக்­குழு கால நீடிப்பை கோரினால் காலம் நீடிக்­கப்­படும். விசா­ரணை முடிந்­ததும் ஆணைக்­குழு அறிக்கை சமர்ப்­பிக்கும் .

அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டதும் என்ன செய்­வ­தென்று பார்ப்போம். இவ்­வா­றான செயற்­பாட்­டுக்கும் விமர்­சனம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் இந்த விட­யத்தில் எந்த செயற்­பாட்டை முன்­வைத்­தாலும் விமர்­சிப்­பார்கள். ஐக்­கிய நாடுகள் விசா­ரணைக் குழு­வுக்கு எதி­ரா­கவும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

நான் உண்­மை­களை கண்­டு­பி­டிப்­பதில் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்றேன். காணாமல் போனோர் தொடர்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள முறைப்­பா­டுகள் தொடர்பில் விசா­ரிக்­கப்­ப­ட­வேண்டும்.

தடை வராது

எந்­த­வொரு நாடும் இலங்­கைக்கு எதி­ராக பொரு­ளா­தார தடை­களை விதிப்­பது தொடர்பில் அச்­சு­றுத்­த­வில்லை. பிரிட்­டனும் அமெ­ரிக்­காவும் தமக்கு இவ்வாறு தடை­களை விதிக்கும் நோக்கம் இல்லை என்று தெளி­வாக குறிப்­பிட்­டுள்­ளன.

மரு­தானை சம்­பவம் அர­சுக்கு தொடர்­பில்லை

மரு­தானை சீ.எஸ்.ஆர். மண்­ட­பத்தில் அண்­மையில் இடம்­பெற்ற சம்­ப­வத்­துக்கும் அர­சாங்­கத்­துக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1988 மற்றும் 89 ஆம் ஆண்­டு­களில் நாங்கள் அந்த இடத்தில் இவ்­வாறு கூட்­டங்­களை நடத்­தும்­போது  இரா­ணு­வத்தை கொண்டு தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. ஆனால் நாங்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை. இடம்­பெற்ற சம்­ப­வத்­துக்கும் அர­சாங்­கத்­துக்கும் தொடர்பு இல்லை.

விசா­ர­ணை­யா­ளர்கள் வர அனு­ம­தி­யில்லை

இலங்­கையி்ல் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ரணை செய்யும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் விசா­ர­ணை­யா­ளர்கள் இலங்­கைக்குள் வரு­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள். நாங்கள் இந்த விசா­ர­ணையை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதனை எதிர்க்­கின்றோம். இந்த விடயத்தில் மிகவும் பக்­கச்­சார்­பான வகையில் செயற்­பட்­டுள்­ளமை நிரூ­ப­ண­மா­கி­யுள்­ளது.

இந்தக் குழுவை யாரும் ஏற்­க­வில்லை. அதனை நிய­மித்­த­வர்­களே ஏற்­றுள்­ளனர். எனவே நாங்கள் அதனை ஏற்­க­வில்லை. ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் இந்த விட­யத்­தி­லான செயற்­பா­டுகள் பக்­கச்­சார்­பா­னவை என்று தெரிந்­து­விட்­டது. எவ்­வா­றெ­னினும் ஐக்­கிய நாடு­களின் ஏனைய முகவர் நிறு­வ­னங்­க­ளுடன் நாங்கள் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­வ­துடன் முழு­மை­யான ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டுவோம்

மக்­க­ளுக்கு சேவை­யாற்­றாத வட மாகாண சபை

வடக்கு மாகாண சபை­யா­னது மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தை­வி­டுத்து அர­சியல் செய்­து­வ­ரு­கின்­றது. பொலிஸ் அதி­கா­ரங்­களை தவிர அனைத்து அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன.

காணி அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன என்றே கூறலாம். காணி விட­யத்தில் மாகாண சபையை கேட்­காமல் மத்­திய அர­சா்­ங­கத்­தினால் எத­னையும் செய்ய முடி­யாது. ஆனால் வடக்கு மாகாண சபை­யா­னது பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றதே தவிர மக்­க­ளுக்கு சேவை­யாற்­ற­வில்லை.

பொலிஸ் அதி­கா­ரங்கள் இல்லை

இவர்கள் அர­சியல் செய்­து­கொ­ண­டி­ருக்­கின்­றனர் என்பது மக்களுக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பதிலியாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆனால் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை.

அவர்கள் சர்வதேச தலையீட்டின் ஊடாக அதிக அதிகாரங்களை பெற முயற்சிக்கின்றனர். எந்தவொரு சூழ்நிலையிலும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்படமாட்டாது.

பொலிஸ் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடமே இருக்கும். புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பில் இன்னும் ஆபத்து உள்ளது. இந்த விடயத்தில் நான்கு அல்லது  ஐந்து முயற்சிகளை நாம் கண்டோம். தேசிய  பாதுகாப்பு எந்தவகையிலும் விட்டுக்கொடுப்புக்கு உட்படுத்தப்பட முடியாது.
Cl

Exit mobile version