மோடி அறிவிப்புக்கு முன் ‘புதிய நோட்டுகள்’ படம் வெளியானது எப்படி.. யார் அந்த ‘கருப்பு ஆடு’?
பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் இணையத்தில் வெளியானது எப்படி என விசாரணை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று இரவு பிரதமர் மோடி கருப்பு பணம் ஒழிப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்றும், அதற்குப் பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய ரூபாய் நோட்டுக்களை பெற சிறப்பு ஏற்பாடு – சதக் அப்துல்லா, மண்டல இயக்குநர், ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற சிறப்பு ஏற்பாடு – சதக் அப்துல்லா, மண்டல இயக்குநர், ரிசர்வ் வங்கி .ஆனால், மோடியின் இந்த அறிவிப்புக்கு முன்னதாகவே புதிய ரூபாய் நோட்டுகளின் படம் இணையத்தில் வெளியானது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்தப் படங்கள் வைரலாகப் பரவியது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னர் இந்தப் படங்கள் எப்படி லீக்கானது என்பது குறித்து மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட போது, அங்கிருந்த ஊழியர் யாராவது தான் இந்த புகைப்படங்களை எடுத்து, அதனை வெளியிட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment