ilakkiyainfo

மோடி கடந்த வந்த பாதை டீக்கடையில் இருந்து டெல்லி வரை..

மோடி கடந்த வந்த பாதை டீக்கடையில் இருந்து டெல்லி வரை..
May 16
23:14 2014

நீங்கள் எதிர்க்கலாம், ஆதரிக்கலாம்.. எப்படி இருந்தாலும் நரேந்திர மோடி என்ற பெயரை ஒதுக்கிவிட முடியாது. அந்தளவுக்கு அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியவர் நரேந்திர மோடி.

டீக்கடையில் வேலை செய்து வந்த சாதாரண குடும்பத்து சிறுவன் இன்று பிரதமர் பதவி வரை வந்து விட்டார். அவர் கடந்து வந்த பாதை இதுதான்..

namo11
குஜராத் மாநிலத்தின் வட்நாகர் கிராமம், மெக்சனா மாவட்டத்தில் உள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு பாம்பே பிரசிடென்சி என்று அழைக்கப்பட்ட மாநிலம்.

இங்கு வசித்தவர் தாமோதரதாஸ் முல்சந்த் மோடி. இவருடைய மனைவி ஹீராபென். இவர்களுக்கு 6 குழந்தைகள். அவர்களில் 3வது குழந்தைதான் நரேந்திர மோடி.

கடந்த 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். இவர்கள் கஞ்சி எனப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். வட்நாகர் ரயில் நிலையத்தில், தந்தை தாமோதர தாஸ் டீ விற்று வந்தார்.

அவருக்கு உதவியாக வேலை செய்தார் மோடி. பள்ளியில் சாதாரண மாணவன்தான் மோடி என்று ஆசிரியர்களால் கணிக்கப்பட்டவர். ஆனால், பள்ளி காலத்திலேயே அரசியல் உள்பட பல விஷயங்களை அக்கு வேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து விவாதம் செய்து வந்தார்.

6ஆர்எஸ்எஸ்.சில் சேர்ந்தார். அதுதான் அவருடைய அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் போட்டு கொடுத்தது. அதில் இருந்து கொண்டே, சகோதரருடன் சேர்ந்து தனியாக வட்நாகர் பஸ் நிலையத்தில் டீ கடை நடத்தினார்.

தனது 13 வயதில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து 18 வயதில் மோடிக்கு ஜசோதா பென் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். சில நாட்களில் அவர்கள் பிரிந்தனர்.

அதன்பின் ஜசோதா பென், சகோதரர்கள் வீட்டில் தங்கி படித்து ஆசிரியையானார். (குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தல்கள் வரை பிரம்மசாரி என்ற கருதப்பட்ட மோடி, நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுவில்தான் மனைவியின் பெயரை குறிப்பிட்டார்.

இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதன்பின் கடந்த 1971ம் ஆண்டு இந்திய- பாகிஸ்தான் போருக்கு பின்னர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு பிரசாரகராக விளங்கினார் மோடி.

பின்னர் சங் பரிவார் மாணவர் அணி தலைவரானார். இதற்கிடையில் டெல்லி பல்கலையில் அரசியல் விஞ்ஞானம் பட்டப்படிப்பு முடித்தார். குஜராத் பல்கலையில் அரசியல் விஞ்ஞானத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

இந்திரா காந்தி எமர்ஜென்சி கொண்டு வந்த போது, அதை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய மாபெரும் இயக்கத்தில் பங்கேற்றார்.

அப்போது சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்களில் மோடியும் ஒருவர். அதன்பின், 1985ம் ஆண்டு மோடியை பா.ஜ.வுக்கு அனுப்பியது ஆர்எஸ்எஸ்.

அதன்பின், 1988ம் ஆண்டு குஜராத் பா.ஜ. செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதுதான் அரசியலின் அடுத்தக்கட்டத்துக்கு உயர்ந்தார். அவர் அமைத்து கொடுத்த வியூகத்தால், 1995ம் ஆண்டு தேர்தலில் குஜராத்தில் பா.ஜ. ஆட்சியை கைப்பற்றியது.

அதன்பின், தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2001ம் ஆண்டு கேசுபாய் படேல் உடல்நிலை பாதிப்பு மற்றும் அரசு மீது இருந்த பல்வேறு புகார்கள் எழுந்தன.

modi5456அப்போது, மோடியை முதல்வராக்க பா.ஜ. மேலிடம் நினைத்தது. ஆனால், அனுபவம் இல்லாத மோடியை முதல்வராக அத்வானி அப்போதே எதிர்ப்பு தெரிவித்தார்.

எனினும், 2001 அக்டோபர் 7ம் தேதி முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன்பின், 2002ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்ப வத்தை அடுத்து குஜராத்தில் ஏற்பட்ட  கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு குழு தீவிர விசாரணை நடத்தி, கோத்ரா கலவரத்தில் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.

அதன்பின், 2002, 2007ம் ஆண்டு குஜராத்தில்  நடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தார். அதன்பின், 2012ம் ஆண்டு மணிநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

8
தொடர்ந்து 3வது முறையாக குஜராத்தில் பா.ஜ. ஆட்சி அமைத்தார் மோடி.  கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ. சார்பில் தீவிர பிரசாரம் செய்தார் மோடி. அப்போதே அவர் பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராக கணிக்கப்பட்டார்.

அதன்படி கோவாவில் நடந்த பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசார கமிட்டி தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். அதில் இருந்து அவருக்கு பல எதிர்ப்புகள் கட்சிகள் கிளம்பின.

குறிப்பாக மோடியை எதிர்த்து கட்சியின் எல்லா பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் அத்வானி. எனினும், பா.ஜ. தலைவர் ராஜ்நாத், சுஷ்மா சுவராஜ் உள்பட பல தலைவர்கள் அத்வானியை சமாதானப்படுத்தினர்.

அதன் பின் அத்வானி தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.அதன்பிறகு 2013 செப்டம்பர் மாதம் மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ. அறிவித்தது. அது முதல் அவருடைய தேர்தல் வியூகம் எல்லாம் ஹைடெக்காகவே அமைந்தது.

gallery_modi_lifeஅதற்கேற்ப ஊடகங்களும், பா.ஜ. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று முதலில் இருந்தே கருத்து கணிப்புகளை வெளியிட்டன. கடைசியாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வரை அந்த கணிப்புகளை ஊடகங்கள் மாற்றி கொள்ளவே இல்லை.

290 இடங்கள் வரை பா.ஜ. கூட்டணி பெறும். மோடி பிரதமர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றே கூறி வந்தன.  குஜராத் மாநிலம் வதோதரா, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி ஆகிய 2 தொகுதியில் மோடி போட்டியிட்டுள்ளார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து டீ விற்று வந்தவர், இன்று பிரதமர் பதவி அளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார் மோடி. இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ. கூட்டணி அதிக இடங்களை பெற்றால், மோடி பிரதமராவது உறுதி.

untitledஅமைச்சரவையை  கவனமாக தேர்ந்தெடுங்கள் மோடிக்கு காசி ஜோதிடர்கள் எச்சரிக்கை

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஜாதகம், அவருக்கு ராஜயோகத்தை அளித்தாலும், அவர் பிரதமரானால் அமைச்சர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வாரணாசியை (காசி) சேர்ந்த ஜோதிடர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆச்சார்ய காமேஸ்வர் உபாத்யாயா என்ற பிரபல ஜோதிடரும், பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஜோதிட பேராசிரியர் சந்திரமவுலி உபாத்யாயா உள்பட பிரபல ஜோதிடர்கள் கூறியதாவது:

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் கடந்த மாதம் 24ம் தேதி பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ராகு காலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும், அன்று கரி நாள். எனவே, வேட்பு மனுவை நல்ல நாளில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அதை அவர் ஏற்கவில்லை. அதற்குரிய பலனை அவர் அனுபவித்தார்.

கடந்த 24ம் தேதி கரி நாளில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வாரணாசி வந்த போது, 25 நிமிடங்கள் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, வாரணாசியில் அவரது தேர்தல் பிரசார பொதுக்கூட்ட பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது அவர் பல்வேறு தடங்கல்களுக்கு இடையே வாரணாசி தொகுதியில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால், கரி நாளில் அவர் மனு தாக்கல் செய்ததால், வாக்கு வித்தியாசம் குறையலாம்.

இனிமேலாவது நாங்கள் சொல்வதை மோடி கேட்க வேண்டும். நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், புதிய அமைச்சர்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

அமைச்சரவை பதவியேற்கும் நேரம், காலம் மற்றும் நல்ல நாள் குறித்து கவனமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் நரேந்திர மோடியின் ஆட்சி நீடித்து நிலைக்கும். இவ்வாறு ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

ஜோதிடர்கள் கூறுவதை போல் நல்ல நேரம், காலம், நாள் பார்த்து நரேந்திர மோடியின் அமைச்சரவை பதவியேற்க வேண்டும் என்று பா.ஜ. தலைவர்கள் பலர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

gallery_modi_life_1

Narendra Modi, pictured here meeting his mother on his 63rd birthday, is married to and separated from retired school teacher Jashodaben. He named her as his wife on the poll affidavit he filed as the BJP’s candidate from Vadodara. This was the first time he publicly acknowledged his wife.

namonazi-1This year, not only has Mr Modi has gone in all guns blazing on the campaign trail, he has been photographed with many of India’s best known and loved personalities including actors Rajinikanth and Salman Khan.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com