மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் மோட்டார் சைக்கிள் சென்று மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை 26 பிற்பகல்  இடம்பெற்ற இச்சம்பவத்தில்  சந்திவெளி பிரதான வீதியை அண்டி வசிக்கும் மனோகரன் சுதன் (வயது 18) என்பவரே பலியானவராகும்.

Santhiveli_Accident.

மேலும், சந்திவெளி – ஜின்னா வீதியை அண்டி வசிக்கும் பாஸ்கரன் விக்ஸனன் (வயது 17) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.