ilakkiyainfo

யாரால் ஏற்­பட்­டது இந்த மாற்றம்?

யாரால் ஏற்­பட்­டது இந்த மாற்றம்?
January 17
14:29 2015

மாற்றம் என்ற சொல்­லைத்­த­விர ஏனைய அனைத்­துமே மாறக்­கூ­டி­யது என்­பது உலக நியதி. இலங்­கையின் ஆட்­சி­யிலும் இது விதி விலக்­கல்ல. கடந்த ஆண்டின் இறு­தியில் இலங்­கையில் ஏற்­பட்ட அர­சியல் புரட்சி இந்த ஆண்டின் ஆரம்­பத்தில் ஆட்சி மாற்றம் ஒன்­றிற்கு வித்­திட்­டது.

நாட்­டிற்கு விடு­த­லையும் ஜன­நா­ய­கமும் அபி­வி­ருத்­தியும் வேண்டும் என்ற கார­ணத்­திற்­காக 2005 ஆம் ஆண்டு ஆட்சி மாற்ற­மொன்று ஏற்­பட்­டது.

அதன் பின்னர் யுத்த வெற்றி, சர்­வ­தேச மாநா­டுகள் இலங்­கையில் நடை­பெற்­றமை, உல­கக்­கிண்ண கிரிக்கெட் போட்டி என உலகம் அங்­கீ­க­ரித்த பல சம்­ப­வங்கள் கடந்த 10 ஆண்­டு­களில் நடந்­தே­றி­யது.

எனினும் 2015 இல் வழமை போலவே ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட்டு விட்­டது. காரணம் என்­ன­வெனில் ஒரு குடும்­பத்தின் ஆதிக்­கத்­தினை மக்கள் விரும்­ப­வில்லை என்­பதே.

2005 ஆம் ஆண்டில் இருந்து ஒரு தசாப்­த­காலமாக நாட்டில் அபி­வி­ருத்­திகள், நன்­மைகள், மாற்­றங்கள் என பல மக்­களின் கண்முன் இடம்­பெற்­றன.

ஆன போதும் கண்முன் தெரி­யாத பல மோச­டிகள் இன்று வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன. எனினும் தற்­போது ஏற்­பட்­டுள்ள மாற்றம் யாரால் ஏற்­பட்­டது? என்­பதே ஆச்­ச­ரி­ய­மா­ன­தாக உள்­ளது.

கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தான் ஒரு அர­ச­னென சித்­திரித்து ஆட்­சி­யினை கொண்டு சென்ற தனி மனி­தனின் ஆதிக்கம் ஒரு மாதத்­தினுள் ஆட்டம் கண்டு விட்­டது.

இதற்குக் காரணம் என்ன? கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக நாட்டில் அமை­தி­யாக இயங்­கிய ஒரு அமைப்பு இன்று அனை­வ­ரி­னதும் வாய்­களில் உச்­ச­ரிக்­கப்­ப­டு­கின்­றது.

சமூக நீதிக்­கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு கோட்டே நாக விகா­ரையின் விஹா­ரா­தி­பதி மாது­லு­வாவே சோபித தேரரின் தலை­மையில் இயங்கிக் கொண்­டி­ருந்த போது நாட்டின் அர­சியல் அமைப்பில் மாற்றம் ஒன்று ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்கை ஆரம்­ப­மா­கி­யது.

இதுவே மாற்­றத்­திற்­கான முதற்­ப­டி­யென குறிப்­பிட முடியும். இதனைத் தொடர்ந்து பிர­தான எதிர்க்­கட்­சிகள் ஒரு சில இவ் அமைப்­புடன் கைகோர்த்­த­மையும் பிர­தான இடது சாரிகள் ஜன­நா­யக­வாதக் கட்­சிகள் என ஒரு பல­மான அணி உரு­வாக்கப்பட்­டது.

இதன் பின்­ன­ணி­யிலும் மாது­லு­வாவே சோபித தேரரே செயற்­பட்டு வந்தார். எனினும் ஆட்சி மாற்றம் என்­பதை விடவும் அர­சியல் அமைப்பின் மாற்­றம்தான் அவ­சி­ய­மென இவர்கள் சுட்டிக் காட்­டினர்.

அப்­போது ஆளும் தரப்­பான ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியின் பிர­தான பங்­கா­ளிகள் வாய்­மூடி செயல்­பட்டுக் கொண்டிருந்த கால­மது.

அப்­போது உரு­வா­கிய பொது எதி­ர­ணியில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அனு­ர­கு­மார திசா­நாயக்க போன்ற பிர­பல்­யங்கள் பின்­ன­ணியில் செயற்­பட்டுக் கொண்­டி­ருந்த போதிலும் பொது எதி­ரணி பல­வீ­ன­மற்­ற­தா­கவே காணப்­பட்­டது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விப்பின் பின்னர் பொது எதி­ர­ணியின் அணி வகுப்பு ஆரம்­ப­மா­கி­யது.

எவ­ருமே எதிர்­பார்க்­கா­த­வொரு நிலையில் எதிர்­பார்த்த தலை­மை­களை விடவும் முக்­கிய தலை­வரை பொது எதி­ரணி களமிறக்­கி­யது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பொதுச் செய­லா­ள­ராக செயற்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ரென கள­மி­றக்கி அர­சாங்­கத்தை ஆட்டம் காண வைத்­தனர்.

பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் கை கோர்த்த பொது எதி­ர­ணி­யினை பலப்­ப­டுத்த 7 பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் தம்மை பணயம் வைத்­தனர். இதுவே மாற்­றத்தின் முக்­கிய படி­யாக கரு­தப்­பட்­டது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் அர­சாங்­கத்தின் பிர­தான பங்­காளி கட்­சியும் பௌத்த சிங்­கள இலட்­சி­னையில் தம்மை அடையா­ளப்­ப­டுத்திக்  கொண்டு செயற்­பட்­ட­து­மான ஜாதிக ஹெல உறு­ம­யவின் வெளி­யேற்றம், அப்­போது மேடை­களில் அக்­கட்­சியின் பீரங்கிப் பேச்­சுக்­களும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை வீழ்த்­தியே தீருவோம் என்ற அழுத்­த­மான வார்த்தை­களும் சிங்­கள பௌத்த மக்கள் மத்­தியில் நம்­பிக்­கை­யினை ஏற்­ப­டுத்­தி­யது.

இத்­தனை காலமும் பொது எதி­ரணி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி வெறு­மனே புலி­களின் ஆத­ரவுக் கட்­சி­யெ­னவும் புலம்­பெயர் நலன் கருதி செயற்­படும் கட்­சி­யெ­னவும் சித்­தி­ரிக்­கப்­பட்டு சேறு பூசப்­பட்டுக் கொண்­டி­ருந்த நிலையில் ஜாதிக ஹெல உறு­ம­யவின் வெளி­யேற்றம் புலம் பெயர் பய­ணத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைத்­தது.

சிங்­கள மக்கள் பொது வேட்­பா­ளரை திரும்பிப் பார்க்க வைத்த பெருமை ஜாதிக ஹெல உறு­ம­ய­வி­ன­ரையே சாரும்.

அதன் பின்னர் ஆளும் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பிர­தான உறுப்­பி­னர்கள் பலர் அரசில் இருந்து பிரிந்து பொது எதி­ர­ணி­யுடன் கை கோர்க்க ஆரம்­பித்­தனர்.

பெரும்­பான்மை சமூ­கத்தை பிரதிநிதித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்கள் பலர் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­த­வு­டனே மக்கள் அலை மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பக்கம் திரும்ப ஆரம்­பித்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் சிறு­பான்மை சமூ­கங்­க­ளான தமிழ், முஸ்லிம் சமூ­கங்­களின் பிரதிநிதி­களான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மலை­யக மக்கள் முன்­னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரே­டி­யாக பொது எதி­ர­ணி­யினை ஆத­ரித்­தமை பொது எதி­ர­ணியின் வெற்­றி­யினை உறு­திப்­ப­டுத்­தி­யது.

தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்­களின் ஒரு­மித்த ஆத­ர­வுடன் கள­மி­றங்­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த காலங்­களில் இன­வாதத்­தினை ஆயு­த­மாக பயன்­ப­டுத்தி ஒரு சில பௌத்த மத அமைப்­புக்­களை சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு எதிராக தூண்டி விட்டு பிரி­வி­னை­யிலும் இரா­ணுவ ஆதிக்­கத்­திலும் ஆட்சி நடத்­திய அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்தராஜபக் ஷவை விட முன்­னி­லையில் இருந்தார் என்­பது புள்­ளி­வி­ப­ரங்­களும் புல­னாய்வு தக­வல்­களும் வெளிப்­ப­டுத்­தி­ன.

இவ்­வா­றா­ன­தொரு பர­ப­ரப்­பான சூழ்­நிலையில் 2015 ஆம் ஆண்­டிற்­கான ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெற்­றது. மாற்றம் ஏற்படுமா அல்­லது மஹிந்த ராஜ­ப­க் ஷ ஜனா­தி­ப­தியின் ஆட்சி நடக்­குமா என்ற கேள்­விக்கு மத்­தியில் ஜன­வரி 8 ஆம் திகதி தேர்தல் நடத்­தப்­பட்­டது.

வழ­மை­யா­கவே நாட்டில் நடந்த தேர்­தல்­களின் போது சுயா­தீ­ன­மா­ன­தொரு தேர்தல் இடம்­பெ­று­வது கேள்விக் குறி­யா­கவே காணப்­பட்­டது. எதி­ர­ணிகள் தொடர்ச்­சி­யாக நாட்டில் சுயா­தீ­ன­மா­ன­தொரு தேர்தல் நடை­பெற வேண்டும் என தெரி­வித்­தமை நாம் அனை­வரும் அறிந்­த­வையே.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் நாட்டில் சுயா­தீ­ன­மா­ன­தொரு தேர்­தலை நடத்த தேர்­தல்கள் ஆணை­யாளர் அறி­வித்­த­துடன் அன்றில் இருந்து பொலிஸ் சேவை சுயா­தீ­ன­மாக செயற்­பட்­ட­மையும் இறுதி நேரத்தில் இரா­ணுவ புரட்­சிக்கு அப்­போ­தைய ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு செய­லா­ளரும் திட்டம் தீட்­டிய போது   இரா­ணுவம் சுயா­தீ­ன­மாக செயற்­பட்­ட­மையும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்­பட வழி வகுத்­தது.

ஜன­வரி 8 ஆம் திகதி அமை­தி­யான முறை­யிலும் அதிக மக்கள் வாக்­க­ளித்­த­து­மான ஜன­நா­யகத் தேர்­த­லொன்று இடம்பெற்றது.

இதில் பொலிஸாரும் இரா­ணு­வமும் தனது கட­மை­யினை மிகச் சரி­யாக செய்து மக்­களை சுதந்­தி­ர­மா­ன­தொரு தேர்­த­லுக்கு அனு­ம­தித்­தமை இம்­முறை மாற்றம் ஒன்று ஏற்­பட அடிப்­ப­டை­யாக அமைந்­தது.

உண்­மை­யி­லேயே ஒரு நாட்டில் அதி­கார பலத்தை விடவும் பண பலத்­தினை விடவும் மக்கள் பலம் மிகவும் பலம் வாய்ந்தது.

அவ்­வா­றான மக்கள் பலம் வெளிப்­பட வேண்­டு­மாயின் சுயா­தீ­ன­மா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்தல் ஒன்று நடை­பெற இட­ம­ளிக்க வேண்­டிய தேவை ஒன்று உள்­ளது. அதை இம்­முறை வெளிப்­ப­டை­யாக அனை­வரும் உணர்ந்து வாக்­க­ளித்­தனர்.

அதேபோல் எந்­த­வொரு விட­யத்­திலும் இரு வேறு வித­மான சக்­திகள் செயற்­படும் விடயம் மிகவும் சாத­க­மாக அமை­வது சாத்­தி­ய­மா­னது. அவ்­வாறு இம்­முறை தேர்­தலின் போதும் இரு­வேறு வித­மான சக்­திகள் செயற்­பட்­டன.

மக்கள் உணரும் வகையில் வெளிப்­புறத் தோற்­றத்தில் மக்­களை கவரும் வகையில் மூவின அர­சியல் கட்­சி­களும் மக்­க­ளுடன் நேர­டி­யான தொடர்­பினை வைத்து ஆத­ர­வினை திரட்­டி­யதைப் போல் மறை­மு­க­மாக மக்­களின் ஆத­ர­வினை பொது எதி­ர­ணியின் பக்கம் திருப்­பிய பெருமை மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னையே (ஜே.வி.பி.)சாரும்.

இட­து­சா­ரிகள் எப்­போதும் யார் பக்­கமும் சாயாமல் தமது காரி­யத்­தினை வென்று முடிப்­பார்கள். ஒக்­டோபர் புரட்சி, ஜேர்­ம­னியப் போராட்டம், ரஷ்ய புரட்­சி­களில் இட­து­சா­ரிகள் யார் என்­பது உல­கிற்கு வெளிப்­பட்­டதைப் போல் இலங்­கையில் ஜனநாய­கத்­தி­னையும் நல்­லாட்­சி­யி­னையும் வென்­றெ­டுக்கும் புரட்­சியில் மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி.) பிர­தான பாத்­திரம் ஏற்று செயற்­பட்­டது.

ஆனால் இவற்றை வெளிப்­ப­டை­யாக எவரும் அறிந்­தி­ருக்­க­வில்லை. ஒவ்­வொரு கிரா­மங்­க­ளாக ஒவ்­வொரு வீடு­க­ளாக தமது பிர­சா­ரங்­களை செய்­த­துடன் சுதந்­தி­ர­மா­ன­தொரு தேர்தல் நடை­பெற மக்கள் விடு­தலை முன்­னணி, (ஜே.வி.பி.) செயற்­பட்ட விதமும் வித்­தி­யா­ச­மா­ன­தா­கவே அமைந்­தது.

தேர்தல் வாக்கு நிலை­யங்­களில் மிகச்­ச­ரி­யான பெயர் பட்­டியல், வாக்கு எண்ணும் நிலை­யங்­களில் தமது பக்கச் சார்­பற்ற ஆட்கள் என சகல விதத்­திலும் தவறு விடாத வகையில் தமது கட­மை­யினை செய்து முடித்து வெற்­றியின் பின்­னரும் புக­ழாரம் இல்­லாது ஒதுங்­கிக்­கொண்­டனர்.

இவை அனைத்தும் தேர்தல் தினம் அறி­விக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஜன­வரி 8 ஆம் திகதி வரையில் நடை­பெற்ற மாற்­றத்­திற்­கான படிக்கல். எனினும் ஜன­வரி 9 ஆம் திகதி தேர்தல் முடி­வுகள் வெளி வந்­த­வுடன் பிர­தான மாற்­றக்­கா­ரர்கள், மாற்­றத்தின் பிர­தா­னிகள் யார் என்­பது வெளிப்­பட்­டது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ மிகப்­பெ­ரிய வெற்­றி­யினைப் பெற்று தன்னை அசைக்க முடி­யாத அர­ச­னாக வெளிப்­ப­டுத்­தினார்.

அதே நம்­பிக்­கையில் மக்­களை இன­வா­தத்­திற்கு கட்­டுப்­பட்­ட­வர்கள் என்று எண்­ணியே இம்­மு­றையும் தான் மூன்றாவதுதடவை­யா­கவும் போட்­டி­யிட நினைத்­தி­ருப்பார் போல்.

ஆனால் இம்­முறை மக்கள் மாற்­றத்­தினை விரும்பி விட்­டார்கள். ஜன­வரி 9 ஆம் திகதி தேர்தல் முடி­வுகள் முன்னாள் ஜனா­தி­பதியாக மஹிந்­தவை மாற்றி விட்­டது.

இத் தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க் ஷ 5,768,090 வாக்­கு­க­ளையும் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன 6,217,162 வாக்­கு­க­ளையும் பெற்­ற­துடன் 449,072 வாக்­கு­களால் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் ஆறா­வது ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்டார்.

இதில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் சிறு­பான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் தமது வாக்­கு­களின் மூல­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்றி பெற வைத்­துள்­ளனர் என்ற கருத்து தேர்­தலின் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் வாயினால் வெளி­வந்­த­மையும் சுட்­டிக்­காட்­டப்­பட வேண்­டி­யது.

உண்­மையில் தமிழ், முஸ்லிம் மக்கள் இரு­வ­ரி­னதும் வாக்­குகள் வடக்கு கிழக்கில் மொத்த வாக்­கு­களில் 90வீத­மேனும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு கிடைத்­தி­ருக்கும்.

கடந்த வட மாகாண சபைத் தேர்­தலின் போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கில் 353,525 வாக்­கு­களைப் பெற்­றது. ஆனால் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வுடன் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு கிடைத்த வாக்­குகள் 394,991 ஆகும்.

வட­மா­காண சபைத் தேர்­தலில் கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு கிடைத்த வாக்­கு­களை விடவும் சுமார் 40 ஆயிரம் வாக்­கு­க­ள் அதிகமாக இம்­முறை ஜனா­தி­ப­தி­யா­கி­யுள்ள மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு கிடைத்துள்ளது.

அதேபோல் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்­தலில் எதி­ர­ணிகள் மொத்­த­மாக பெற்ற வாக்­கு­களின் எண்­ணிக்கை 401,645 ஆக காணப்­பட்­டது.

ஆன­போதும் இம்­முறை ஜனா­தி­ப­தி­யான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு கிழக்கு மக்கள் 583,120 வாக்­கு­களை வழங்கி சுமார் ஒரு லட்சம் மேல­திக வாக்­கு­களை பொது எதி­ர­ணிக்கு வழங்­கி­யுள்­ளனர்.

இம்­முறை வடக்கு கிழக்கு மக்­களின் வாக்­குகள் மொத்­த­மாக 978,111 வாக்­குகள் பொது எதி­ர­ணி­யி­ன­ருக்கு கிடைத்­துள்­ளது.

இது இவ்­வாறு இருப்­பினும் ஜனா­தி­ப­தி­யாக போட்­டி­யிட்ட மஹிந்த ராஜ­ப­க் ஷவிற்கு வடக்கு மற்றும் கிழக்கில் மொத்­த­மாக 323,600 வாக்­குகள் கிடைத்­தது. ஆன போதும் முழு­மை­யாக தமிழ், முஸ்லிம் வாக்­குகள் மட்­டுமே மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினை ஜனா­தி­பதியாக்கியது என்பதை ஏற்றுக் கொள்­வ­திலும் சிறிய சிக்­கல்கள் இருக்­கத்தான் செய்­கின்­றன.

வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் இன்றி மொத்த வாக்­கு­களின் எண்­ணிக்­கை­யினை பார்த்­தாலும் மைத்­தி­ரி­பால சிறி­சேன 5,893,562 வாக்­கு­க­ளுடன் முன்­னி­லை­யிலும் மஹிந்த ராஜ­ப­க்ஷ 4,789,979 வாக்­கு­க­ளுடன் பின்தங்கிய நிலை­யி­லேயே உள்ளார்.

எனவே கணி­ச­மான அளவு சிங்­கள வாக்­குகள் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு கிடைத்­துள்­ளது என்றும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்.

 

எனவே, இந்த வெற்றி தேசிய வெற்றி. மூவின மக்­களும் ஒன்­றி­ணைந்து ஒரு ஜன­நா­ய­கத்­திற்­கான தலை­வனை தெரிவு செய்­துள்­ளனர். இவையே மாற்­றத்­திற்கு பிர­தான கார­ண­மாகும்.

இந்த வெற்­றியில் ஒருவர் மட்டும் பங்கு கொள்ள முடி­யாது. மூவின மக்­களின் ஒற்­று­மையும் மூவின மக்­களின் எதிர்­பார்ப்பும் ஒன்றாக கைகோர்த்து ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள மாற்­ற­மா­னது மக்­களைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமானதொன்­றா­கவே உள்­ளது. தமது வாழ்­வா­தாரம், மத முரண்­பாடு, இன­வா­தத்தில் இருந்து விடு­பட வேண்­டி­ய­தொரு தரு­ணத்தில் மிகச் சரி­யான சந்தர்ப்பமொன்று கிடைத்த போது மக்கள் அதை சரி­யாக பயன்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்.

இந்த மாற்­றத்­தினை தவ­றாக பயன்­ப­டுத்தி மீண்­டு­மொரு குழப்­பத்­தினை ஏற்­ப­டுத்தி விடக்­கூ­டாது என்றும் இம் மாற்றத்தனால் விளங்கிக் கொள்ள வேண்டியதே.

 

ஆர். யசி

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com