ilakkiyainfo

யாரும் வரலாம் எவரும் போகலாம் : எம்.ஏ.சுமந்­திரன்

யாரும் வரலாம் எவரும் போகலாம் : எம்.ஏ.சுமந்­திரன்
November 04
06:47 2017

 

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம்.

இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப் போகிறோம் என்று கேட்டால் அத­னையும் சாத­க­மாகப் பரி­சீ­லித்து உள்­வாங்­குவோம்  என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் யார் இருக்­கி­றார்கள் யார் இல்­லா­துள்­ளார்கள் என்­பது தெரி­யா­துள்­ளது.

காரணம் தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பு ஆரம்­பித்­த­போது தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், தமி­ழீழ விடுதலை இயக்கம் ஆகிய மூன்றும் கைச்­சாத்­திட்டு கூட்­ட­மைப்பு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

கைச்­சா­த்தி­டப்­பட்ட ஆவ­ணத்தில் இந்த மூன்று கட­்சி­களும் தான் கைச்­சாத்­திட்­டுள்­ளன.

தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்­கி­ற­தாக நாங்கள் கூறு­கின்ற இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியோ,  புளொட் அமைப்போ உள்ளே இருக்­க­வில்லை.

ஆரம்­பத்தில் இருந்த தமிழர் விடு­தலைக்  கூட்­டணி மாகா­ண­சபைத் தேர்­தலின் போது உள்ளே இருந்­தது தற்­போது இல்­லா­தது போல் தெரி­கின்­றது.

ஆரம்­பத்தில் உள்ளே இருந்த அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் இப்­போது உள்ளே இல்லை என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. அப்­படிப் பார்க்கும் போது தமி­ழீழ விடு­தலை இயக்கம் ஒன்­றுதான் ஆரம்­பத்­திலும் இருந்­தது இப்­போதும் இருக்­கின்­றது.

மஹிந்த ராஜபக் ஷ ஒரு­த­டவை சொன்­னது போல தங்­க­ளு­டைய கட்சி சலூன் கதவு போல யாரும் வரலாம் யாரும் போகலாம்.

அது மாதி­ரித்தான் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் இருக்­கி­றது போல தென்­ப­டு­கின்­றது. ஆகையால் தேர்­தலின் போது தனியே சென்று கேட்­ப­தற்கு யாருக்கும் பூரண சுதந்­திரம் இருக்­கி­றது. வலுக்­கட்­டா­ய­மாக பிடித்து யாரையும் அமர்த்­த­மாட்டோம்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்துக் கேட்பதாக இருந்தால் சுதந்திரமாக வெளியில் போய் கேட்கலாம்.

அல்லது வேறு கட்சிகள் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டியிடப் போகிறோம் என்று கேட்டால் அதனையும் சாதகமாகப் பரிசீலித்து உள்வாங்குவோம் என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com