ilakkiyainfo

யாழில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.’ யாழ் பொலிஸ்மா அதிபர்

யாழில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.’  யாழ் பொலிஸ்மா அதிபர்
October 03
02:34 2018

div class=”post-content”>

“யாழ்ப்பாணம், சுன்னாகம், கோப்பாய் மற்றும் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 27 குழு மோதல் சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. அவற்றுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

அவர்களில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜெயசுந்தர தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, அண்மைக்காலங்களில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட போதே மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அண்மையில் எனது ஆளுமைக்கு கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஆவா குழு சார்ந்த 27 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் அதிகமாக 10 சம்பவங்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிலும், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 9 சம்பவங்களும் இடம்பெற்றன. ஏனைய பொலிஸ் நிலைய பகுதிகளில் எட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய 38 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு, சம்பவங்கள் நடைபெற்ற நீதிமன்ற நியாயாதிக்க நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் சிலருக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் ஆவா குழுவைச் சாராத வேறு குழு மோதல்களில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சாவகச்சேரி அஜித் குழுவின் மீது 5 குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com