Site icon ilakkiyainfo

யாழில் கொரோனாவுக்கு ஒரே வாரத்தில் 31 பேர் பலி!: மொத்த உயிரிழப்பு 229

 

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

யாழ். மாவட்ட செயலகத்தின் கொவிட்-19 புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஓகஸ்ட் -22 முதல் 28 வரையிலான 07 நாட்களில் இவ்வாறு 31 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

ஓகஸ்ட் மாதத்தில் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்கள் தொடர்பான விவரம் வருமாறு:-
ஓகஸ்ட் – 02இல் – 04 பேர், ஓகஸ்ட் – 03 இல் – 02 பேர், ஓகஸ்ட் – 04 இல் 02 பேர், ஓகஸ்ட் – 06 இல் – 02 பேர், ஓகஸ்ட் – 07 -இல் பேர், ஓகஸ்ட் – 08 இல் – 03 பேர், ஓகஸ்ட் – 09 இல் – 03 பேர், ஓகஸ்ட் – 10 இல்- 06 பேர், ஓகஸ்ட் – 11இல் 05 பேர், ஓகஸ்ட் – 12 – இல் 04 பேர், ஓகஸ்ட் – 13 – இல் 05 பேர், ஓகஸ்ட் – 14 – இல் 07 பேர், ஓகஸ்ட் – 15 – இல் 03 பேர், ஓகஸ்ட் – 16 – இல் ஒருவர், ஓகஸ்ட் – 17 – இல் 02 பேர், ஓகஸ்ட் – 18 – இல் 06 பேர், ஓகஸ்ட் – 19 – இல் ஒருவர், ஓகஸ்ட் – 20 – இல் 05 பேர், ஓகஸ்ட் – 21 – இல் 03 பேர், ஓகஸ்ட் – 22 – இல் 02 பேர், ஓகஸ்ட் – 23 -இல் ஒருவர், ஓகஸ்ட் – 24 – இல் 06 பேர், ஓகஸ்ட் – 25 -இல் 06 பேர், ஓகஸ்ட் – 26 -இல் 07 பேர், ஓகஸ்ட் – 27 – இல் 04 பேர், ஓகஸ்ட் – 28 – இல் 05 பேர்,

இதன் மூலம் இந்த மாதத்தின் முதல் 28 நாட்களிலும் 98 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதையடுத்து யாழ். மாவட்டத்தில் ஓகஸ்ட்- 28 வரையில் கொவிட் -19 காரணமாக உயிரிழந்துள்ளவர்களது எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version