ilakkiyainfo

யாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு!

யாழில் தொடர்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் இளைஞர்களால் நையபுடைப்பு!
October 17
19:41 2018

யாழ். திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையர்களை அப்பகுதி இளைஞர்கள் நையப் புடைத்திருந்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இந்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் இன்று மாலை நடமாடியுள்ளனர்.

அவர்களை மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட்களை இளைஞர்கள் மீட்டனர்.

IMG-20181016-WA0017பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பான சீ.சீ.ரி.வி காட்சிகளை பார்த்து பிடிபட்டவர்களே கொள்ளையர்கள் என அடையாளம் கண்டதை தொடர்ந்து கொள்ளையர்களை இளைஞர்கள் பிடித்து கட்டுவதற்கு முயற்சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ளனர்.

எனினும் அகப்பட்ட இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் அவர்களை மின் கம்பத்துடன் கட்டி வைத்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கொள்ளையர்ரகளை கைது செய்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com