Site icon ilakkiyainfo

யாழில் பட்டப்பகலில் நகை திருட்டு; ஒருவர் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டு மேற்கு – கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து இரண்டரைப் பவுண் நகை திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 4 ஆம் திகதி வீட்டின் உரிமையாளர் அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ள நிலையில் அவர்களது வீட்டில் இருந்த இரண்டரைப் பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவே
சி.சி.டிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை இன்று (06) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தானே நகைகளைத் திருடியதாகவும், அவற்றில் இரண்டு பவுண் நகையை நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளதாகவும், மிகுதி நகை தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட இன்னொரு நபர் தலைமறைவாகியுள்ளார் எனவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார ் தெரிவித்தனர்.

Exit mobile version