யாழ்ப்பாணம் –  பருத்தித்துறை பிரதான வீதியில்  சிறுப்பிட்டி பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹைஏஸ் வானும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

அச்சுவேலியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  எம்.திலீபன் (வயது -40) என்ற குடும்பத்தலைவரே விபத்தில் உயிரிழந்தார்.

gfrewss“யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த வானும் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து இடம்பெற்றது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த  குடும்பத்தலைவர் பயணித்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது” என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.