ilakkiyainfo

யாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – முக்கிய நபர்கள் இருவர் சிக்கினர்
December 15
11:53 2019

மானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.’

மானிப்பாய் மற்றும் கட்டுடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய், சுதுமலையில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட வன்முறைக் கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்ற போது, பொலிஸாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் கைவிட்டுத் தப்பி சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய், சுதுமலை வடக்கில் கடந்த 12ஆம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தி அட்டூழியத்தில் தப்பித்தது.

அந்த வீட்டிலிருந்து புறப்பட்டு சிறிது தூரத்தில் மானிப்பாய் பொலிஸார் இருவரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் வீதியில் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றது.

வன்முறைக் கும்பலின் மோட்டார் சைக்கிள்களை மீட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிள் ஒன்றின் உரிமையாளரான நவாலியைச் சேர்ந்தவரை அன்றைய தினம் மாலை கைது செய்தனர். எனினும் தனது மோட்டார் சைக்கிளை கும்பல் பறித்துச் சென்றது என்று அந்த நபர் தெரிவித்திருந்தார்.

20180423_075317மோட்டார் சைக்கிள் உரிமையாளர் கைது செய்யப்பட்டதும் அன்றைய தினம் (12) இரவு அவருடைய வீட்டுக்குள் புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டு விட்டுத் தப்பித்திருந்தது.

இரண்டு வன்முறைகளையும் ஒரே கும்பலைச் சேர்ந்தோரே செய்தனர் என்று விசாரணைகளில் பின்னர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அந்தக் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கட்டுடையைச் சேர்ந்த ஒருவரும் மானிப்பாயைச் சேர்ந்த ஒருவருமெ இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்கப்படும் நிலையில் மேலும் நால்வரைத் தேடி பொலிஸார் விசாரரணகளை முன்னெடுத்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com