யாழ். குடாநாட்டில் கொட்டும் மழை…! வெள்ளம் ஏற்படும் அபாயம்!!
யாழ்.குடாநாட்டில் நேற்று பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருகிறது.
யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், இன்றைய தினம் அதிகாலையுடன் மழை சற்று ஓய்ந்திருந்தது.
இதனால், பொதுமக்கள் இன்று பகல் தமது அன்றாட நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப்பதற்கு வசதியாகவிருந்தது.
எனினும், மாலை 05 மணி முதல் கடும் மழை ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீடித்த மழை வீழ்ச்சி காரணமாகப் பல இடங்களிலும் வெள்ளம் தேங்கிக் காணப்படுகின்றது.
இந்நிலையில் இந்த மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக நீடித்தால் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment