ilakkiyainfo

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது; யாழ் ஒருங்கிணைப்புக்குழு

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது; யாழ் ஒருங்கிணைப்புக்குழு
July 23
22:19 2018

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு திணைக்கப்பணிப்பாளருக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று  இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற தொல்லியல் திணைக்களம் தொடர்பான விடயத்திலேயே இவ் விடையம் எடுக்கப்பட்டள்ளது.

இதன்போது மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம்  யாழ். துரையப்பா விளையாட்டரங்கினை புனரமைப்பு செய்யும்போது விளையாட்டரங்கின் ஒருபகுதி யாழ். கோட்டையின் ஒரு பகுதியாக உள்ளமையால் அதனை புனரமைப்பு செய்ய விடாது பல்வேறு தடைகளை தொல்லியல் திணைக்களம் விதித்தது.

அவ்வாறான நிலையில் இராணுவத்தினர் எவ்வாறு அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்கியது. இதற்கான அனுமதி பெறப்பட்டதாகவும் தெரியவில்லை. எனவே இராணுவத்தினரை கோட்டைக்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி,

2010 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்.கோட்டையின்  ராணி மாளிகையின் ஒரு பகுதியில் சுமார் 20 ற்குட்பட்ட இராணுவத்தினர் தங்குவதற்கு ஏற்ற  சிறிய முகாம் காணப்பட்டது. தற்போது ராணி மாளிகை மீள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதற்காக இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரிக்கையை விடுத்திருந்தோம். இதற்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளருக்கு இராணுவத்தினர் தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தனர்.

இதற்கமைவாக பணிப்பாளரினால் 40x 20 என்ற அளவில் தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இராணி மாளிகை புனரமைக்கப்பட்டு அதற்குள் நூதன சாலை அமைக்கப்படவுள்ளது.

அதற்காகத் தான் அப்பகுதி புனரமைக்கப்படவுள்ளது.  புனரமைக்கப்பட்டதும் அங்கு ஒரு  நூதன சாலையும் அப்பகுதியலிருந்து ஆலயம் அமைக்கப்படவுள்ளது.

அவ்வவாறு புனரமைக்ப்படும்போதும் மீண்டும் இராணுவத்தினருக்கு அது வழங்கப்படமாட்டாது.

இதேவேளை சிவாஜிலிங்கம் கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை ஏற்படின் தற்காலிக கொட்டகைக்குள்  அதற்கு பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடட்டும். புனரமைப்பு முடிந்ததும் பொலிஸார் வெளியேறவேண்டும். இராணுவத்தை இருக்க விட்டால் ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததாக போய்விடும்.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் திணைக்களப் பணிப்பாளருக்கு குறித்த விடயத்தை எழுதுவதாக தெரிவித்ததுடன் கோட்டைக்குள் ஒட்டகம் என நகைச்சுவையாக பதிலளித்தார்.

குறித்தவிடயம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக அனுப்பி வைப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com