ilakkiyainfo

யாழ்.சிறைச்சாலைக்கு உணவுப்பொதியில் கஞ்சா எடுத்துச் சென்றார் என வயோதிபத் தாயார் விளக்கமறியலில்

யாழ்.சிறைச்சாலைக்கு உணவுப்பொதியில் கஞ்சா எடுத்துச் சென்றார் என வயோதிபத் தாயார் விளக்கமறியலில்
March 17
15:44 2019

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்துக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் வயோதிபத் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை சந்திக்க அவரது தாயாருக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அனுமதி வழங்கப்பட்டது. அவரிடம் இரண்டு உணவுப்பொதிகள் இருந்தன. அவற்றைச் சோதனையிட்ட போது ஒன்றில் சுமார் 100 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டது.

வயோதிபப் பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை பொலிஸார் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

“சந்தேகநபர் தனது மகனுக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார். அந்தவேளை, அங்கு வந்த ஒருவர் தனது உறவினர் தடுப்பில் இருப்பதாகவும் அவருக்கு சாப்பாடு வழங்கவேண்டும் தன்னிடம் அடையாள அட்டையில்லாத்தால் அனுமதி கிடைக்காது என்று தெரிவித்தார். அதனால் தனது உறவினருக்கான உணவுப் பொதியையும் சந்தேகநபரிடம் வழங்கி அதனை சேர்ப்பிக்குமாறு கேட்டார்.

அதனால் அவரது நிலையறிந்து சந்தேகநபர் அந்த உணவுப் பொதியையும் எடுத்துச் சென்ற போதே அதற்குள் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். எனவே சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று வயோதிபப் தாயார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்த சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய மன்று, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com