Site icon ilakkiyainfo

யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து, இளம்யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!!

sadalam

யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளம்யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் இப்பகுதிக்கு குளிக்கச் சென்ற  பொதுமக்கள் சடலம் ஒன்று கிணற்றில் காணப்படுவதாக தெரிவித்ததை அடுத்து அப்பகுதியில் மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

மேற்படி சடலமாக காணப்படுபவர் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டிருந்தது.

மேலும் சடலம் காணப்பட்ட கிணறு பொதுக்கிணறாக அப்பகுதி மக்கள் பாவித்து வருகின்றனர்.

உயிரிழந்த பெண் தன்னுடன் கொண்டு சென்ற துவிச்சக்கரவண்டி, செருப்பு உள்ளிட்டவைகள் கிணற்றில் அருகில் இருந்து மீட்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு தற்போது பொலிஸார் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயது மதிக்கத்தக்க ஜெயரோமி கொண்சலிட்டா எனவும் இவர் 21 அடப்பன் வீதி குருநகர் முகவரியை உடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version