ilakkiyainfo

யாழ். நவாலியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம்!

யாழ். நவாலியில் வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம்!
July 12
20:18 2014

 

யாழ். நவாலி தெற்கில் கல்லுண்டாய் வைரவர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வெளியில் இருந்து கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மானிப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸார் காலை 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

சிவப்பு சேலை ஒன்றால் சடலம் சுற்றிக் கட்டப்பட்டு இருந்தது.

கொடிகாமத்தை சேர்ந்த நாகராசா குகதீபன் என்பவரே இறந்து உள்ளார் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார். மேலதிக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

3`1
கட்டுநாயக்கவில் பெட்டியில் இடப்பட்ட நிலையில் சிசு மீட்பு
12-07-2014

1கட்டுநாயக்க வல்பொல வீதியில் கார்ட்போட் பெட்டியில் இடப்பட்ட நிலையில் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சுமார் ஒன்றரை மாதம் பூரணமான சிசுவே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மீட்கப்பட்ட சிசு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை மீட்பு தொடர்பில் சந்தேகநபர் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீட்டிலிருந்த பெண் கொலை: பணம் கொள்ளை
553460281deathbody2

கட்டுகஸ்தோட்ட, உடுவாவல பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

74 வயதான பெண் ஒருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிலிமதலாவ பிரதேசத்தில் வசிக்கும் குறித்த பெண், ஒரு வாரத்துக்கு முன் கட்டுகஸ்தோட்ட பிரதேசத்திலுள்ள அவரது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த பெண் மட்டுமே அந்த வீட்டில் இருந்துள்ள நிலையில், வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் இந்த கொலையை செய்துள்ளார்.

வீட்டிலிருந்து வெளிநாட்டுப் பணம் உள்ளிட்ட பணத் தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டுகஸ்தோட்ட பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com