ilakkiyainfo

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர்கள் குழு விஜயம்

யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர்கள் குழு விஜயம்
July 20
08:42 2016

யாழ் பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிந்து கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று முக்கிய அமைச்சர்கள் சிலர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.

இக்குழுவில் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், அநுரபிரியதர்ஷன யாப்பா, பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

இவர்கள் பல்கலைக்கழக உபவேந்தர், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் தமிழ், சிங்கள மாணவர்களின் பிரதிநிதிகளுடனும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதன்போது நமக்கிடையில் எந்தவித இன முரண்பாடுகளும் கிடையாது. எனினும் இனி இவ்வாறான குழப்பகரமான சம்பவங்கள் இனியும் ஏற்படாது என பல்கலைக்கழக மாணவ குழுக்களின் தலைவர்கள் அமைச்சர்களிடம் உறுதியளித்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட குழப்பநிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதுடன், எதிர்வரும் காலங்களில் எந்தவிதமான குழப்பகரமான செயற்பாடுகளிலும் ஈடுபடப்போவதில்லையென யாழ் பல்கலைக்கழக மாணவ குழுக்களின் தலைவர்கள் உறுதிமொழி வழங்கியுள்ளனர்.

நேற்றையதினம் யாழ் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், அநுரபிரியதர்ஷன யாப்பா, பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான ஆகியோர் உபவேந்தர், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், சிங்கள, தமிழ் மாணவர்களின் பிரதிநிதிகள், மாணவ ஆலோசகர்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

 தமக்கிடையில் எந்தவிதமான இனரீதியான முரண்பாடுகளும் இல்லையென்றும், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாது என்றும் மாணவர்கள் அமைச்சர்களிடம் உறுதிமொழி வழங்கியிருந்தனர்.

பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலும் அதன்பின்னரான நிலைமைகள் தொடர்பிலும் இந்த அமைச்சர்கள் குழு விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. மாணவர்களிடையே எந்தவித பிரச்சினையும் கிடையாதென அமைச்சர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அரசாங்கம் என்ற ரீதியில் இந்த விடயத்தில் தாம் தலையிட  விரும்பவில்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா, விசாரணை நடத்துவதற்காக பல்கலைக்கழகம் குழுவொன்றை நியமித்துள்ளது. இதற்கு மேலதிகமாக வெளியிலிருந்து எந்தவித குழுக்களையும் நியமிக்கத் தேவையில்லையென்றும் கூறினார்.

சிலரின் தூண்டுதலின் பேரிலேயே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதென்பதை மாணவர்கள் சுட்டிக்காட்டியிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அதேநேரம், பல்கலைக்கழகம் மீண்டும் விரைவில் திறக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சகல மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஒட்டுமொத்த விருப்பமாக இருக்கிறது என பிரதி ஊடகத்துறை அமைச்சர் கருணாரட்ன பரனவிதான குறிப்பிட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் இனரீதியான சம்பவம் அல்ல. சிறியதொரு சம்பவம் என்பதை அமைச்சர்கள் தமது விஜயத்தின்போது அறிந்துகொண்டதாக யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் கூறினார்.

தம்மால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவை வரவேற்றிருந்த அவர்கள், விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கு கையளிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வு தொடர்பில் அவர்கள் நேரில் கண்டறிந்துகொண்டதாகவும், மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடல்களில் அவற்றை அவர்கள் புரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர்கள். கேட்டுக்கொண்டிருந்தனர். சிங்கள மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து வழமைபோன்று தமது கல்வி செயற்பாடுகளைத் தொடரமுடியும்.

இதற்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லையென சிங்கள மாணவர்கள் சார்பில் கருத்து வெளியிட்ட மாணவத் தலைவர் கூறினார். கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறாது. எனவே எவரும் அச்சமின்றி வந்து படிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.

இதேவேளை, இந்த அமைச்சர்கள் குழு யாழ்ப்பாண கச்சேரியில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரையும் சந்தித்து பல்கலைக்கழக சம்பவம் குறித்துக் கலந்துரையாடலொன்றையும் நடத்தியிருந்தது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பம்

3460-1-4e29414bc76f800cfcd4bbc81ed3d770

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

மருத்துவ பீடம், சித்த மருத்துவ அலகு, வவுனியா வளாகம், விவசாய பீடம் ஆகிவற்றின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.

கலைப்பீடம், சித்திரமும் வடிவமைப்பும், நடனம், இசைத்துறைகளின் பரீட்சைகள் திட்டமிடப்பட்டவாறு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் என பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் குறிப்பிட்டார்.

இதனையடுத்து பல்கலைக்கழக்தின் கல்வி நடவடிக்கைகள் முழு அளவில் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை அண்மையில் ஏற்பட்ட மோதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com