ilakkiyainfo

யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!

யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!
May 08
20:22 2019

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கின் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

யாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விடயங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது என நீதவான் ஏ.எஸ்.பி.போல் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.பல்கலைகழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினர், பொலிஸ் அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலில் மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்கள் மீட்கப்பட்டன.

இந்த விடயம் குறித்து மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com