ilakkiyainfo

யாழ்.மருத்துவ பீட மாணவன்  தற்கொலை!!: மரணத்தில் சந்தேகம்; இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது

யாழ்.மருத்துவ பீட மாணவன்  தற்கொலை!!: மரணத்தில் சந்தேகம்; இரத்த மாதிரி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது
November 18
06:08 2020

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் அவர் வசித்த வீட்டிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

யாழ். வடமராட்சி மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதான சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

குறித்த மாணவன் கோண்டாவில் கிழக்கு, வன்னியர்சிங்கம் வீதியிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளக்கூடிய சம்பவங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை எனவும், மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை சடலத்தைப் பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி மயூரன், கழுத்து இறுகியதால் மரணம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.
எனினும், மாணவனின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸாரும் அவரின் இரத்த மாதிரியைப் பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இளங்குன்றனின் உடல் நேற்றிரவு யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து அவரது உடல் பருத்தித்துறை, துன்னாலை வடக்கிலுள்ள அவரது இல்லத்துக்கு மருத்துவபீட மாணவர்களால் கொண்டு செல்லப்படும் என்று சக மாணவர்கள் தெரிவித்தனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com