ilakkiyainfo

ரணில் வளைந்து நெளிந்து நட­ன­மா­டிய பின்­னணி என்ன தெரியுமா??: விளக்குகிறார் மஹிந்த ராஜபக்ச

ரணில் வளைந்து நெளிந்து நட­ன­மா­டிய  பின்­னணி என்ன தெரியுமா??: விளக்குகிறார் மஹிந்த ராஜபக்ச
January 15
07:27 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏன் வளைந்து வளைந்து நடனமாடினார் என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுனவின் தேர்தல் பிர­சார கூட்டம் நேற்று பெல்­ம­துளை  பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்.

இந்த அர­சாங்கம் பய­ணிக்கும் பாதை மிகவும் மோச­மா­னது, மக்­க­ளையும் கலா­சா­ரத்­தையும் அழிக்கும் நட­வ­டிக்­கை­க­ளையே படிப்­ப­டி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இவர்­களை விரைவில் வெளி­யேற்ற வேண்டும். அதில் எம்­மத்­தியில் எந்த மாற்றுக் கருத்­துக்கும் இட­மில்லை. இவர்கள் ஆட்­சியை கைப்­பற்ற பல்­வேறு பொய்­களை கூறியும் கட்டுக் கதை­களை உரு­வாக்­கியும் கூறினர். மக்­களை ஏமாற்­றியே இவர்கள் ஆட்­சியை கைப்­பற்­றினர்.

இதன் பின்­ன­ணியில் பாரிய சூழ்ச்சி நிகழ்ந்­துள்­ளது. பண்­டா­ர­நா­யக்­கவின் கொள்­கையும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்­கையும் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக காவு­கொ­டுக்­கப்­பட்­டு­விட்­டன.

நாம் இத்­தனை கால­மாக கட்­டிக்­காத்த ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தூய்­மை­யான கொள்கை இன்று முழு­மை­யாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­னா­லேயே அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

கட்­சியில் இருந்து வெளி­யே­றிய சிலர் பண்­டா­ர­நா­யக்­கவின் கொள்­கையை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கால­டியில் வைத்து பூஜை செய்ய தொடங்­கினர். அன்­றுதான் பண்­டா­ர­நா­யக்க இரண்­டா­வது தட­வை­யாகும் கொலை­செய்­யப்­பட்டர்.

இந்த அர­சாங்கம் வந்­த­வுடன் மத்­திய வங்­கியில் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது. மக்­களின் பணம் அவர்­களின் உழைப்பு ஒரு­சி­லரால் அப­க­ரிக்­கப்­பட்­டது.

இந்த நாட்டில் இடம்­பெற்ற மிகப்­பெ­ரிய ஊழல் இது­வாகும். இந்­நி­லையில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. அதன் பின்னர் என்ன நடந்­தது என்று யாருக்கும் தெரி­யாது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டு மக்­களை ஏமாற்­றி­விட்டார். அறிக்கை வர முதல்­நாளே நட­ன­மா­டினார். வளைந்து நெளிந்து நட­ன­மா­டினார். மிகவும் அழ­காக அவ­ரது நடனம் அமைந்­தது.

ஆனால் இந்த நட­னத்தின் பின்­னணி என்ன. அவர் ஆடிய நடனம் குறித்து மட்­டுமே நாங்கள் கதைத்­துக்­கொண்டு விமர்­சித்­துக்­கொண்டு உள்ளோம். ஆனால் மத்­திய வங்கி கள­வினை மூடி மறைத்து மக்­களை திசை­தி­ருப்­பவே ரணில் விக்­கி­ர­ம­சிங்க அவ்­வாறு நட­ன­மா­டினார்.

இவர்கள் அனை­வ­ருமே மக்­களை ஏமாற்றி மக்­களின் பணத்தில் கொள்­ளை­ய­டித்து வாழ்ந்து வரு­கின்­றனர். இந்த நாட்­டுக்கு சிறிதும் பொருந்­தாத ஒரு அர­சியல் கால­சாரம் இன்று உரு­வாக்­கப்­பட்டு வருகின்றது.

ஒரு சிலர் தாம் தூய்மையான நாட்டினை உருவாக்கி வருவதாக கதை கூறி வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியோ மற்றுபுரம் மக்களின் சொத்துக்களை கொளையடித்து மத்திய வங்கியை தூய்மையாக தூசுபடாது சுத்தம்செய்து வைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com