அமெரிக்காவில் உள்ள Philadelphia சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை ஒரு விமானம் தரையிறங்கும்போது திடீரென பாதை மாறியதால், ரன்வேயை விட்டு விலகி சென்றதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. மலேசிய விமானம் மறைந்தது ஒருவாரம் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உலகம் முழுவதும் பெரும் பதட்டம் நிறைந்துள்ள நிலையில் நேற்று காலை Philadelphia விமான நிலையத்தில் மாலை 5.50 மணிக்கு US Airways flight 1702 என்ற விமானம் தரையிறங்க தொடங்கியது. அப்போது திடீரென அந்த விமானம் ரன்வேயில் இருந்து தடம்மாறி மணற்பாங்கான பகுதிக்கு சென்றதால் விமான நிலைய அதிகாரிகள் பெரும் பதட்டம் அடைந்தனர். பின்னர் ஒருவழியாக அந்த விமானத்தின் பைலட் மணல்பகுதியில் விமானத்தை நிறுத்தினார். விமானத்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
ஒரு பயணி இந்த புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்ததால் இந்த புகைப்படம் பெருமளவில் உலகம் முழுவதும் பகிரப்பட்டது. ஒரு பெண் பயணி அந்த விமானத்தின் முன் நின்று தன்னைத்தானே புகைப்படும் எடுத்து அவரும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார்.