காலி நாகரட்ண மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் மற்றும் கார் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.அளுத்கமயிலிருந்து காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் காருடன் மோதியுள்ளது.இதன் காரணமாக காரை செலுத்திவந்த 57 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இதேவேளை விபத்து இடம்பெற்றவேளை காரிற்குள் பலியானவரின் மனைவியும் இருந்துள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார், புகையிரதம் வருவதை பார்த்ததும் அவர் குதித்து உயிர் தப்பியுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட புகையிரதக் கடவையில் பணியிலிருந்த பெண் ஊழியர் நான் புகையிரதம் வருவதாக காரில் உள்ளவர்களிற்கு  சைகை காட்டினேன் என தெரிவித்துள்ளார்.

எனினும் காரை செலுத்திவந்தவர் அதனை அலட்சியம் செய்ததார் அதன் காரணமாகவே இந்த விபத்து  ஏற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்து விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.