மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளது.

இச் சம்பவமானது புனானை மற்றும் வெலிக்கந்தப் பகுதிகளுக்கிடையிலேயே இடம்பெற்றுள்ளது.

குறித்த இந்த விபத்துக் காரணமாக ரயில் எஞ்சின் மற்றும் இரண்டு ரயில் பெட்டிகளும் தரம்புரணட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரயில்வே கட்டுப் பாட்டு நிலையம், ரயிலை தண்டவாளத்தில் நிறுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால் மட்டக்களப்பிலிருந்து ரயில் போக்குவரத்து சேவை தற்காலிகமாக பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.