திருகோணமலை கந்தளாய் பகுதியில் கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற கடுகதி ரயிலுடன் லொறியொன்று மோதியதில் லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இவ் விபத்துச் சம்பவம் நேற்று (29.10.2019) இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3தம்புள்ளையிலிருந்து கந்தளாய் பகுதியிக்குச் சென்ற லொறியொன்றே கந்தளாய் ரஜஎல ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் ரயிலுடன் மோதுண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த ஏ.எச்.எச்.சோமவீர வயது(43),நிமால் பண்டார வயது(49) மற்றும் ரொசான் திலக்கரத்தின வயது(32),ஆகியோரே காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

5ரயில் பாதுகாப்பு கடவை உத்தியோகத்தர் கடமையில் இல்லாத சமயத்திலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.