ilakkiyainfo

ரெயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை – அதிர்ச்சியில் மனைவியும் அதே இடத்தில் உயிரை மாய்த்தார்..!!

ரெயில் முன் பாய்ந்து நீதிபதி தற்கொலை – அதிர்ச்சியில் மனைவியும் அதே இடத்தில் உயிரை மாய்த்தார்..!!
October 06
16:01 2018

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சுதாகர் (வயது 62), நேற்று காலை ரேணிகுண்டா அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தார்.

அவரது உடலை திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், தற்கொலை குறித்து விசாரித்து வந்தனர். தற்கொலை செய்த இடத்தில் இருந்து நீதிபதி சுதாகர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

இதுபற்றிய முழு விவரங்களையும் போலீசார் வெளியிடவில்லை. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே, சுதாகர் மரணம் குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி வரலட்சுமி (வயது 58) கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். கணவரின் உடலை வாங்குவதற்கு வீட்டில் உள்ளவர்கள் சென்றபோது, கணவர் தற்கொலை செய்த அதே இடத்திற்கு நேற்று இரவு சென்ற வரலட்சுமி, ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார்.

இருவரின் தற்கொலை குறித்தும் ரேணிகுண்டா ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவரும் மனைவியும் அடுத்தடுத்து ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com